Published:Updated:

விஸ்வரூபம் சினிமா பாணியில் தீவிரவாதிகள் அனுப்பிய உளவுப்புறா!

விஸ்வரூபம் சினிமா பாணியில் தீவிரவாதிகள் அனுப்பிய உளவுப்புறா!
விஸ்வரூபம் சினிமா பாணியில் தீவிரவாதிகள் அனுப்பிய உளவுப்புறா!

விஸ்வரூபம் சினிமா பாணியில் தீவிரவாதிகள் அனுப்பிய உளவுப்புறா!

சண்டிகர்: விஸ்வரூபம் சினிமா பாணியில் , காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பினர் உளவு பார்க்க புறாவை அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் பகுதியில், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்வதாக மத்திய உளவுத்துறை இந்த வாரத் தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த புறா அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஸ்வரூபம் சினிமா பாணியில் தீவிரவாதிகள் அனுப்பிய உளவுப்புறா!

நேற்று முன்தினம் மாலை,  பஞ்சாப் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பதன் கோட் அருகில் உள்ள மன்வால் என்ற கிராமத்தில் ரமேஷ் சந்திரா என்பவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு புறா வந்து இறங்கியது. அந்த புறாவின் இறகுகளில் எழுத்துக்கள் இருப்பதை ரமேஷ்சந்திரா பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார். உடனே இது தொடர்பாக அவர் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.  உடனே அந்தக்  கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து  பதன்கோட் போலீசார் ரமேஷ்சந்திரா வீட்டுக்கு சென்று அந்தப்  புறாவைப்  பிடித்தனர்.

வெள்ளை நிறம் கொண்ட அந்தப் புறாவின் இறகுகளில்,  உருது மற்றும் ஆங்கிலத்தில் வார்த்தைகள் எழுதப்பட்டு இருந்தன. மேலும் புறாவின் ஒரு இறக்குக்குள்  செல்போன் நம்பர் ஒன்றும் எழுதப்பட்டு இருந்தது.

அந்த நம்பர் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவல் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த புறாவை போலீசார் ஸ்கேன் செய்து பார்த்தனர். ஆனால் அதன் முடிவு வெளியிடப்படவில்லை.

புறா உடலுக்குள் ரகசிய கருவிகள் வைத்து அனுப்பப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த புறாவை காஷ்மீரில் உள்ள தங்கள் குழுக்களைச்  சேர்ந்தவர்களுக்கு அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காஷ்மீர் வனப்பகுதிக்குள் செல்வத்திற்குப் பதில் அந்த புறா வழி தவறி பதான் கோட் வந்து விட்டதாக தெரிகிறது. பதன் கோட் போலீசார் அந்தப்  புறாவைத்  தாங்கள் பொறுப்பில் வைத்துள்ளனர்.

புறா மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உளவு பார்த்த விவகாரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு