Published:Updated:

சவுதியில் குமரி மீனவர் கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொலை!

நெல்லை: சவுதி அரேபியாவில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர் ஒருவர் கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பொழிக்கரை மீன கிராமத்தை சேர்ந்தவர் மதிவளன். இவர், தனது நண்பர்கள் 7 பேரும் சேர்ந்து சவுதி அரேபியால் முகமது முபாரக் என்பவரது படகில் மீன் பிடிக்க சென்றனர். தொழில் நிமித்தமாக சென்ற இவர்கள் ஆழ் கடலில் மீன்பிடித்து வந்தனர்.

இந்த நிலையில், இந்திய நேரப்படி நேற்றிரவு 10 மணிக்கு சவுதி அரேபிய கடல் எல்லைக்குள் வந்த கடல் கொள்ளையர்கள், தமிழக மீனவர்களின் படகில் இருந்த பொருட்களையும், மீன்களையும் கொள்ளைடிக்க முயன்றனர். அப்போது, மதிவளன் அதனை தடுக்க முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் மீனவர் மதிவளனை கடற்கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றனர்.

அவரது உடல் சவுதி அரேபியால் உள்ள ஜிதேள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் உடன் சென்ற மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மதிவளனின் உறவிர்களுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
 
சவுதியில் குமரி மீனவர் கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொலை!

மதிவளனுக்கு மேரி பெளளஜி என்ற மனைவியும், ஆனந்தன் ஜெரிட்டா என்ற மகனும், ஆன்சள் ஜெரிஸ்சா என்ற மகளும் உள்ளனர்.

மதிவளனின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ஆண்டனிராஜ்

படங்கள்: ரா.ராம்குமார்

அடுத்த கட்டுரைக்கு