'டிராம்வே' லத்தி அடி!

விஞ்ச் துரையின் வாயில் சுருட்டு புகைந்தது. ரணசிங்கத்தை சென்னப் பட்டணத்தில் இருந்து ஜபல்பூருக்கு ரயிலேற்றிவிட்ட இன்ஸ்பெக்டர் மார்ட்டின்ஸை உற்றுப் பார்த்தார்.

''சொல்.. சொல்... ரணசிங்கம் ஜபல்பூருக்குக் கிளம்பிப் போன முன்கதையை முழுவதுமாகச் சொல்!'' -புகையை இழுத்து ஊதினார். மார்ட்டின்ஸ் நினைவுகளில் பின்னோக்கிப் போனார் -

ரயில் பெட்டியின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த ரணசிங்கம், பின் நகர்ந்து போகும் சென்னப் பட் டணத்தை, ஓர் அந்நிய தேசம் போல் பார்த்தான்.

பட்டணத்தின் மையத்தில் ஓடும் 'டிராம்வே'தான் சகலரும் பயணிக்கும் வாகனம். வைதிகர்களும் பட்டு வஸ்திரம் அணிந்த தனவந்தர்களின் குடும்பங்களும் ஜட்கா வண்டிகளில் குலுங்கிக்கொண்டு போனார்கள். கோட்டு, சூட்டு, தலையில் தொப்பி அணிந்த ஆங்கிலேயப் பாங்கானவர்களை, கை ரிக்ஷாக்களில் அமர்த்தி, ''ஓரம்போ... நைனா... ஓரம்... ஓரம்...'' -இழுத்துக்கொண்டு ஓடுபவன், தலையில்

தொப்பியும், காலில் தேய்ந்துபோன சப்பாத்துகளும் அணிந்திருந்தான். ஜனநெருக்கடியற்ற ரஸ்தாக்களில் வண்டுகள் போல் அரிதாக ஊர்ந்து திரிந்த மோட்டார் கார்களில் வெள்ளைக்கார துரைமார்களும் செல்வச் சீமான்களும் பயணித்தனர். பட்டணத்தில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் பேசுபவர்கள் சமவிகிதமாய்க் கலந்திருந்தனர். ஒருவரோடு ஒருவர் காரியார்த்தமாகவே பேசினார்கள். பிறர் முகம் பார்த்து எவரும் சிரித்துப் பேசக் காணோம். வெட்டிப் பேச்சுக்கு வேலை கிடையாது.

மதுரைக்காரர்கள் இப்படி இல்லை. சத்தங்களோடு ஜனித்தவர்கள். பேச்சுச் சத்தமும் சிரிப்புச் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். கொட்டுச் சத்தம், மேளச் சத்தம், ஒலிபெருக்கிச் சத்தம் போதாமல், அருகில் இருப்ப வர்களிடம்கூட உரக்கப் பேசுவார்கள். செத்தாலும் ஒப்பாரி வைத்து அலறுவார்கள். பேசாதபோது தின் பார்கள். தின்னாதபோது பேசுவார்கள். பேச்சுத் துணை இல்லாமல் தனியே இருப்பவனுக்கு உயிர்பயம் வந்துவிடும். தனக்குத்தானே பேசிக்கொண்டு, உயிரோடு இருப்பதை உறுதி செய்துகொள்வான்.

ரணசிங்கம் மதுரையை ஏனோ வெறுத்தான். வந்திறங்கிய ஒரே நாளில் சென்னப் பட்டணம் பிடித்துப்போனது. மனதுக்குப் பிடித்த பட்ட ணத்தில் ஓர் இரவு தங்கியதோடு சரி. மறுநாளே ரயிலேற்றிவிட்டார்கள். ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்க்க சௌகரியமாய் இருந்தது.

பெட்டிக்குள் எல்லாம் அந்நிய முகங்கள். தெலுங்கும் ஆங்கிலமுமே புழங்கின. உள்ளே இருந்த ஒன்றிரண்டு தமிழனும் உடைமைகளைப் பாதுகாப்பதிலேயே குறியாய் இருந்தான். தெலுங்கர்கள், எல்லோருடனும் வலிய கைகுலுக்கிச் சிரித்தார்கள். பயணிகளை எல்லாம் ஓரக் கண்ணளந்த வெள்ளைக்காரர்கள் விறைப்புக் குறையாமல் சுருட்டு புகைத்துக்கொண்டிருந்தார்கள்.

பெரம்பூர் புகைவண்டி நிலையத்துக்கு வெளியே, 'டிராம்வே' தொழிலாளர்கள் கூடி, ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தார்கள். லத்தி போலீஸ் அடித்து விரட்டியது.

அடி பொறுக்க மாட்டாமல், ஆர்ப்பாட்டக்காரர்கள் துடிக்கிறார்கள்.

''போலீஸ் அடக்குமுறை ஒழிக...'' -அடி விழுகிறது.

'' மஹாத்மா காந்திக்கு ஜே!''

''பாரத மாதாகி ஜே...!'' -மண்டை தெறிக்கிறது.

''நேதாஜி சுபாஷ் சந்திர போஸ§க்கு ஜே!'' -தலையில் ரத்தம் வழிய திரும்பவும் கோஷமிடுகிறார்கள். ''ஜெய்ஹிந்த்.''

''சிதம்பரம் பிள்ளைக்கு ஜே!'' - விரட்டி விரட்டி அடி விழுகிறது.

உத்தரவிடுபவன் வெள்ளைக்காரனாய் இருக்கிறான். ஓடஓட விரட்டி அடிப்பவன் உள்நாட்டுக்காரனாய் இருக்கிறான்.

வியப்பு மேலிட ரணசிங்கம் பார்த்துகொண்டிருந்தான். பெருமூச்சு விட்டுப் புகைவண்டி கிளம்பும் நேரம், லத்தி போலீஸ் துப்பாக்கி தூக்கியது. ஜன்னலோரம் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தவனுக்கு ஒண்ணுமே புரியலே. 'வெள்ளைக்காரன் அஞ்சு பேரு. உள்ளுர்க்காரன் ஆயிரம் பேரு. அவன் அடிக்க... அடிக்க... இவன் ஏன் வாங்குறான்? லத்தியைப் பிடுங்கித் திருப்பி அடிக்க வேண்டியதுதானே? அடி வாங்கச் சொன்னது யாரு? காந்தியா? நேதாஜியா? அடிக்க அடிக்க வாங்குறதுக்குப் பேரு போராட்டமா?' -உதட்டோரச் சிரிப்பில் கோபம் இளகியது. கொந்தளிப்பான பட்டணத்துக் கடைசிக் காட்சி ரணசிங்கத்தை இறுக்கியது.

நிகழ்கால உலகில்...

கல்யாண வீட்டின் முன் வந்து நின்ற லாரியில் இருந்து முதல் ஆளாய் குதித்திறங்கினான் சண்முகப்பாண்டி. அடுத்தடுத்து பாலமுருகன், செல்லமுத்து, பட்டாணி இறங்கிவந்து லாரியின் பின்பக்கக் கதவைத் திறந்தார்கள் கல்யாண மாப்பிள்ளைக்குப் பதில் வேல்க்கம்பை நிறுத்தி 'கட்டுத்தாலி' கட்டி முடித்ததில் நெஞ்சு கனத்துப்போயிருந்த சனமெல்லாம் லாரியைப் பார்த்தது. தலைகவிழ கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்த மாயழகியின் முடிகோதி நின்ற ரணசிங்கமும் லாரியின் பக்கம் திரும்பினான். மாயழகி கவிழ்ந்தே இருந்தாள்.

உள்ளூர் இளவட்டங்களும் பெரியவர்களும் லாரியை நோக்கி ஓடினார்கள். பெண்கள் பந்தலைவிட்டுக் கடவாமல், இங்கிருந்தே கழுத்து நீட்டி ஆந்தி பார்த்தார்கள்.

லாரியின் பின் கதவைத் திறந்து குதித்திறங்கிய இளவட்டங்கள் பரபரத்தார்கள்.

''ம்... தூக்கு... தூக்கு!''

''மெதுவா... மெதுவா...''

''ஒவ்வொண்ணா இறக்குங்கப்பா.''

''ஏய்.. முனியசாமி, நீ தலையைப் பிடி.''

கீழே நின்ற பெரியவர்களும் உள்ளூர் இளவட்டங் களும் விவரம் புரியாமல் முண்டியடித்தார்கள்.

முதல் பிணம் இறங்கியது. ''அடேய்....! என்னடா ஆச்சு?'' -மாரந்தை பாண்டி கத்தினார்.

இரண்டாவது பிணம் இறங்கியது. இளவட் டங்கள் எதுவும் பேசாமல் பிணங்களை இறக்கிக் கொண்டு இருந்தனர்.

''ஏப்பா இளவட்டங்களா... ! பொணமா இறங்குதே... என்னப்பா நடந்துச்சு?'' -பெரியவர் தவசியாண்டி வாய்விட்டு அலறினார். பந்தலில் நின்ற பெண்கள் எல்லாம் விழுந்தடித்து ஓடி வந்தார்கள்.

''ஆத்தாடீ... ஆத்தாடீ..! இதென்ன கொடுமை! லாரி நிறையப் பொணமா வந்து இறங்குதே!'' -நெஞ்சில் நெஞ்சில் அடித்துக்கொண்டு இடிபட் டார்கள்.

கூட்டத்தை விலக்கி முன்னே வந்தான் ரணசிங்கம். சண்முகப்பாண்டியும் செல்லமுத்துவும் ரணசிங்கத்தின் கைகளைப் பிடித்து முகத்தில் வைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார் கள்.

''என் பிள்ளை எங்கே? என் மகன் திருக்கண்ணனை எங்கே?'' -கத்து கத்தென்று கத்தினாள் அழகுமீனா. இறங்குகிற பிணங்களின் பக்கமே திரும்பாமல் காயம்பட்ட இளவட்டங்கள் ஒவ்வொருவனையும் தொட்டுத் தொட்டுக் கேட்டாள். ''அடே மகனே திருக்கண்ணா! எங்கேடா இருக்கிறே!'' -மாயழகி மட்டும் பந்தலில் பெஞ்ச் பலகையில் தனித்து அமர்ந்திருந்தாள். மாயழகிக்கு 'கட்டுத்தாலி' கட்டிய கோட்டையம்மாள்கூட அருகில் இல்லை. லாரியை மொய்த்து சனம், ஈசலாய்த் துடித்தது.

லாரியிலிருந்து எட்டாவது பிணம் இறங்கிய போது, இதுவரை அழுகையை அடக்கி வைத்திருந்த இளவட்டங்கள் எல்லாம், ''அண்ணேன்.. அண்ணேன்..!'' -ரணசிங்கத்தைப் பார்த்து வெடித்து அழுதார்கள்.

இறங்கும் பிணங்களை, கண்கள் நிலைகுத்த பார்த்துக் கொண்டிருந்த ரணசிங்கம் எட்டாவது பிணத்தை அடையாளம் கண்டதும், இடது கையால் வாய்பொத்தி, பிதுங்கிய துயரத்தை அமுக்கினான். அருகில் நின்ற சண்முகப்பாண்டியும் செல்லமுத்துவும், ''அண்ணேன்... திருக்கண்ணன் போயிட்டான்ண்ணேன்..!'' -கதறி னார்கள்.

''ஆத்தாடீ... இவன் என் பிள்ளையா? என் மகன் திருக்கண்ணனா!'' -'ணங்... ணங்' என நெஞ்சில் குத்திய அழகுமீனா, பல்லு கட்டி மயங்கிக் கீழே விழுந்தாள்.

திருக்கம்மாவும் பஞ்சவர்ணமும் தெருப் புழுதியில் கதறி உருண்டார்கள்.

''அய்யய்யோ...! என் தங்கச்சி தலையிலே இடி விழுந் துருச்சே! மாயழகி தலையிலே மண்ணு விழுந்துருச்சே!'' -தங்கச்சாமி குமுறிக் குமுறி அழுதான். பிணங்கள் இறங்கிக்கொண்டிருந்தன.

பெரியவர் தவசியாண்டி, '' மோசம் போச்சே..! மோசம் போச்சே..!'' -நெஞ்சு அடைக்கத் தடுமாறினார்.

மாரந்தை பாண்டி, ''அடேய்... அழுகாதீங்கப்பா... ஏம்மா.. அழுகாதீங்கம்மா..'' -சொல்லிக்கொண்டே குலுங்கிக் குலுங்கி அழுதார்.

''புலிகளும் சிங்கங்களும் பொணமா வந்து இறங்குதே!'' -வெள்ளையம்மா கிழவி தரை பரசி ஒப்பாரி வைத்தாள். தலையிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு சனம் கூப்பாடு போட்டது. மயங்கி விழுந்து கிடந்த அழகு மீனாவின் முகத்தில் செம்புத் தண்ணீரை 'சுளீர்... சுளீர்' என அடிக்க... மெள்ளக் கண் விழித்தவள், பரக்கப் பரக்கக் கூட்டத்தைப் பார்த்தாள். 'கீசு... கீசு' என மூச்சிரைத்தாள். பெண்களின் கைத்தாங்கலில் எழுந்தவள், ''என் மகனை எங்கே? என் சிங்கத்தை எங்கே?'' -தடுமாறித் தடுமாறி பிணங்களுக்கு அருகில் வந்தாள். ஒவ்வொரு பிணமாய் உற்று உற்றுப் பார்த்தாள். திருக்கண்ணன் பிணம் ஓரடி தனித்துக் கிடந்தது. ''ஆத்தாடீ...! என் பிள்ளை நெஞ்சு பிளந்து கிடக்குதே!'' -தலை கிறுகிறுத்தது.

''அடேய்... அய்யா... திருக்கண்ணா... உனக்கு இன்னைக்கு கல்யாணம்டா மகனே! எந்திரிடா... அய்யா..!'' -ரத்தம் பிசுபிசுக்க நெஞ்சில் விழுந்து கதறி னாள். அத்தனை சனமும் அழுதது.

கண்ணீர் தளும்ப, இறுகிப்போய் நின்றிருந்தான் ரணசிங்கம். அரியநாச்சி, பந்தலை நோக்கி ஓடினாள். ''மதினி... அண்ணன் செத்துப் போச்சு மதினி!''

பந்தலில் தனியே அமர்ந்திருந்த மாயழகி, மெள்ள எழுந்து, குவிந்து கிடக்கும் பிணங்களைச் சுற்றிக் கூடி நிற்கும் சனங்களைப் பார்த்தாள்.

''தாயீ... மாயழகி..!'' -பெண்களெல்லாம் கை விரித்துக் கத்தினார்கள்.

டி.எஸ்.பி. ஸ்காட் ஏறிவரும் ஜீப்பை நடுவே விட்டு முன்னும் பின்னும் லாரிகள் அணிவகுக்க, பெருநாழி நோக்கி ஊர்ந்து வந்துகொண்டிருந்தது போலீஸ§ பெரும் படை.

-களிறு பிளிறும்...