Published:Updated:

பாகிஸ்தானும், வங்காளதேசமும் இந்து நாடுகளே: மோகன் பகவத் பேச்சு!

பாகிஸ்தானும், வங்காளதேசமும் இந்து நாடுகளே: மோகன் பகவத்  பேச்சு!
பாகிஸ்தானும், வங்காளதேசமும் இந்து நாடுகளே: மோகன் பகவத் பேச்சு!

பாகிஸ்தானும், வங்காளதேசமும் இந்து நாடுகளே: மோகன் பகவத் பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாகிஸ்தானும், வங்காளதேசமும் இந்து நாடுகளே: மோகன் பகவத்  பேச்சு!

மதுரா: இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானும், வங்காளதேசமும் இந்து நாடுகளே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

மதுராவில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பகவத் பேசுகையில்,

“ ஒரே இந்து நாடு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. இந்தியா என்பது இந்து நாடுதான்.அதை எந்த விலை கொடுத்தாலும் மாற்ற முடியாது. சில மக்கள் தங்களை இந்துக்கள் என சொல்கின்றனர். சிலர் இந்தியன் என சொல்கின்றனர். இன்னும் சிலர் தங்களை ஆரியர்கள் என்றும், சிலர் உருவ வழிபாட்டில் நம்பிக்கையற்றவர்கள் எனவும் கூறிக்கொள்கின்றனர். இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று ஏற்றுக் கொண்டாலும் எந்த மாற்றமும் இதில் ஏற்படாது.

இந்திய துணைக்கண்டத்தில் வாழும் அனைவருமே இந்துநாட்டைச்  சேர்ந்தவர்கள்தான். அவர்கள் வேறுபட்ட குடியுரிமையை கொண்டிருந்தாலும் அவர்களுடைய நேஷனாலிட்டி இந்துதான். சிந்து நதி இங்கு ஓடியதால் அரபு மன்னர்கள் இந்த பகுதியை இந்து என அழைக்க தொடங்கினர். பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிடம் இருந்து பிரிக்கப்பட்டது. 1971 ல் வங்காளதேசம்  பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள மக்களின் குடியுரிமை மாறுவதற்கு நாடு பிரிக்கப்பட்டதே காரணம். ஆனால், அவர்கள் தங்கள் வீடுகளையே, நாடுகளையோ விட்டு செல்லவில்லை. எனவேதான் அவர்களின் நேஷனாலிட்டி இன்னும் மாறவில்லை என்று நான் கூறுகிறேன்.  சில மக்கள் தெளிவில்லாமல் தங்களை கிறிஸ்தவர்கள் என்றும், முஸ்லீம்கள் எனவும் கூறிக்கொள்கின்றனர். இந்த நிலப்பரப்பின் பழங்கால பெயர் இந்துஸ்தான். வெளிப்படையாகவே இங்கு வாழும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்துக்களே” என்று கூறினார்.

மேலும், அவர் நமக்கு சாதகமாக இருக்கும் இந்த சூழலை பயன்படுத்தி, நமது அமைப்பின் சித்தாந்த கொள்கைகளை பரப்புவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு