வீடு நோக்கி...

ரிவால்வரோடு கமுதி தெரு இருட்டுக்குள் விழுந்து ஓடினான் தலையாரி. வேல்கம்பை தொட்டிருக்கிறான். வெட்டரிவாளைப் பிடித் திருக்கிறான். ரிவால்வரைப் பார்த்ததோடு சரி. அதிகாரிகளின் இடுப்பு உறைக்குள் இருக்கும். உற்று உற்றுப் பார்ப்பான். பார்ப்பதிலும் சலிப்பு உண்டாகி, 'அதெல்லாம் வெள்ளைக்காரன் ஆயுதம். அந்தக் கழுதையைப் பார்த்து... நமக்கு என்ன ஆகப் போகுது!' என முகத்தைத் திருப்பிக்கொள்வான்.

டி.எஸ்.பி-யான ஸ்காட், 'பொசுக்' என ரிவால்வரை உருவி கையில் திணித்ததும் திகைத்துப் போனான். மனசு கொள்ளாத சந்தோசம்! சிவன் கோயிலைத் தாண்டி

ஓடுகிற வேகத்திலும், கையிலிருந்த ரிவால்வரைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டே ஓடினான். உச்சி மண்டைக் குள் யோசனைகளாக உருண்டன.

'எப்படி சுடுறது?'

'எப்படியாவது சுட வேண்டியதுதான்.'

'இந்தா இருக்குதே... இதுக்குள்ளே ஆள்காட்டி விரலைவிட்டு, அமுக்க வேண்டியதுதான்.'

'நம்ம என்ன... குறி தவறாம மனுசப் பயலையா சுடப் போறோம்? பொத்தாம் பொதுவா... ஆகாசத்தை பார்த்து ஒரு சுடு சுடப்போறோம்!'

'அது சரி... ரணசிங்கம் ஆளுக, அத்தனை போலீ?? களையும் அழிச்சுட்டு... வெறிகொண்டு வர்றான்ங்க. அவன்ங்க முன்னாடி போயி... கரப்பான்பூச்சி மீசையைத் தூக்குற மாதிரி, ரிவால்வரை தூக்கினால்.... கொல்லத்தான் போறான்ங்க. ஒரு தலையாரிப் பயலுக்கு இந்த வேலை தேவையா?'

- ஓட்டமும் யோசனையுமாக குண்டாற்று தென் கரைக்கு வந்து சேர்ந்தான் தலையாரி.

உயரமான கரை. குவியல் குவியலாக... எருக்கலஞ் செடிகளும் மஞ்சணத்தியும் அடைத்திருந்தன.

மெள்ள தலை நீட்டி, கரைக்கு மேலே எட்டிப் பார்த்தான். கருஞ்சேனை ஆற்று மையத்தைக் கடந்திருந்தது. ரிவால்வரை பொத்திப் பொத்தி கரை மேல் வைத்தான். கழுத்தில் கிடந்த துண்டை எடுத்து, தலையைச் சுற்றி இறுக்கிக் கட்டினான்.

வேட்டியை தார்ப் பாய்ச்சினான். ஓடுவதற்கு வாகாக, தொடை களை முன்னும் பின்னும் ஆட்டிப் பார்த்துக் கொண்டான். கருஞ்சேனை வண்டிகள் ஆற்று மணலில் புதைந்து ஊர்ந்தன. மாடுகளின் கழுத்து மணிச் சத்தத்தைத் தவிர வேறு சத்தமில்லை. வாய் அடக்கி வந்தார்கள். கரை தொட நேரமாகும்.

திரும்பி ஓட்டமெடுக்கப் போகும் பாதையை, தலையாரி ஒரு முறை பார்த்துக்கொண்டான். ரிவால்வரை கையில் எடுத் தான். வழிவிட்ட அய்யனார் கோயில் இருக்கும் மேற்கு திசை நோக்கி, ரிவால்வரோடு கைகளை உயர்த்தி, ஒரு பெரும் கும்பிடு போட்டான்.

'வழிவிட்ட அய்யனாரே! என்னைக் காப்பாத்து!' -மனதுக்குள் வேண்டினான். உயரத் தூக்கிய கைகளை இறக்காமலே, சாமி மேல் பாரத்தைப் போட்டு, ரிவால்வர் விசையை அழுத்தினான். வானத்தை நோக்கி வெடித்த சத்தத்தில் தலையாரியின் குலை ஆடிப் போனது. கண்ணை மூடிக்கொண்டு, திரும்பிப் பார்க்காமல், வந்த வழியே ஓட்டம் பிடித்தான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரே ஓட்டம். புதர் தாண்டி தெற்கே பார்த்து ஓடினான். காலில் அகப்பட்ட முள்ளுக் குமிகள் நொறுங்கின. மூச்சை இறுக்கிப் பிடித்து ஓடியவன், பாதை தவறி, மேற்கே தாவி ஓட்டமெடுத்தான். செட்டியூரணி கரை கண்டும் வேகம் தணியக் காணோம். தெற்கே பாய்ந்தான். வேப்ப மரங்களும் அரச மரங்களும் அடைத்திருந்த இருட்டுக்குள் நாக்குத் தள்ள ஓடியவனுக்கு எதிரே, ஜீப் கடந்தது.

''முதலாளி...!'' -ரெண்டு கைகளையும் விரித்துக் கத்தினான்.

ஜீப்புக்குள் பின் புறம் அமர்ந்திருந்த முதலாளி, ''தலையாரி...! நாங்க போறோம். நீ எப்படியாவது தப்பிச்சிரு!'' -கை அசைத்தார். ஜீப்பை ஓட்டிப்போன ஸ்காட், வேகத் திலேயே குறியாக இருந்தார்.

பொம்மியின் கால்மாட்டில் அமர்ந்து உடையப்பன் அழுதான்.

''ஏத்தா... பொம்மி...! உம் புருசன் திருந்திட்டேன். என்னை நம்புத்தா...!''

ஒருக்களித்துப் படுத்திருந்த பொம்மி, இரண்டு கால் களையும் மடக்கினாள். நிறை வயிறு வலித்தது.

''அம்மா... பொம்மி! உன் கோபமெல்லாம் நியாயந்தான். உன்னை நான் அடிச்சிருக்கேன். உதைச்சிருக்கேன். பதிவிரதையை சந்தேகப்பட்டுப் பேசி இருக்கேன். அவமானப்படுத்தி இருக்கேன். இல்லேன்னு சொல்லலே. பூமாதேவி மாதிரி அத்தனையையும் நீ சகிச்சுக்கிட்டே!'' -பொம்மியின் கால்களைத் தொடப் போனான். அவளோ கால்களை மேலும் உள் இழுத்தாள். அடி வயிறு வலித்தது.

''பத்தினியை வீட்டுலே வச்சுக்கிட்டு... பரத்தை களைத் தேடி ஊர் ஊரா அலைஞ்ச அயோக்கியன் நான். என்னை மன்னிச்சிரு பொம்மி!''

தொழுவத்தில் கண்விழித்த வண்டிக்காரன் மண்ணுதின்னி, மெதுவாக வந்து தாழ்வார மறைவில் அமர்ந்தான்.

''ஆப்பநாட்டிலே பிறந்த மாவீரன் ரணசிங்கம்! அவனுக்கு எதிரா... கமுதி முதலாளியோடு சேர்ந்து நான் சதி செஞ்சேன். துரோகம் பண்ணினேன். ரணசிங்கம் எதையுமே பொருட்படுத்தலே. சட்டப்படி அவனுக்கு வந்து சேர்ந்த கோயில் மரியாதையைக்கூட எனக்கு விட்டுக் கொடுத்தான். நான் உதாசீனம் பண்ணினேன்.''

மண்ணுதின்னிக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை.

''என் ரத்தப் பொறப்புகள் எல்லாம், அடுத்த தெருவிலே செத்துக் கிடந்தபோது, இழவு கேட்க நானும் போகலே. உன்னையும் போகவிடலே!'' -உள்ளங்கைகளால் தன் முகத்தில் ஓங்கி ஓங்கி அறைந்தான்.

''நான் மனுச சென்மமே இல்லே! மிருகம்... நான் மிருகம்!'' -அழுதான்.

பொம்மி புரண்டு திரும்பினாள். உடையப்பன் உண்மையிலேயே அழுது கொண்டிருந்தான். முகத்தில் கண்ணீர் நிறைந்திருந்தது. பொம்மி திடுக்கிடத்தான் செய்தாள். நம்பவும் முடியவில்லை. எப்படி நம்புவது? மனுசன்ல சேர்த்தி இல்லாத ஒரு மிருகம், ஒரு நாளைக்குள் மாற, என்ன நடந்தது? நடிக்கிறானா? அப்படியும் தெரிய வில்லையே! வாக்கப்பட்ட காலத்திலே இருந்து, இப்படி இவனைப் பார்த்ததில்லையே..!

''கமுதி முதலாளியை நம்பி நான் மோசம் போயிட்டேன் பொம்மி. ஆப்பநாட்டை அவன் வளைக்க... என்னை ஒரு கருவியா வச்சிருக்கான். ரணசிங்கம் அண்ணனோடு என்னை மோதவிட்டு அவன் குளிர்காய்றான். எனக்கு புத்தி வந்துருச்சு. நல்லவன் யாரு, கெட்டவன் யாருனு தெரிஞ்சு போச்சு பொம்மி. உன்னைத் தொட்டுத் தாலி கட்டின பாவத்துக் காகவாவது என்னை மன்னிச்சிரு தாயீ...''

பொம்மி கையூன்றி எழுந்தாள்.

''எந்திரி பொம்மி. ரணசிங்கம் அண்ணன் காலிலே விழுந்து மன்னிப்பு கேக்குறேன். வா... நீயும் வா.'' -கைத்தாங் கலாகத் தூக்கினான். தாழ்வாரத்தில் ஒன்றியிருந்த மண்ணுதின்னி, திருதிருவென முழித்தான்.

'பொம்மி ஆத்தா... ஏமாந்திரும் போலிருக்கே!'

வானத்தை நோக்கித் துப்பாக்கி வெடிக்க, கருஞ்சேனை நடு ஆற்றுக்குள் நின்றது. பாலமுருகனும் முஹம்மது மீராவும் கை அமர்த்தினார்கள்.

''கரையிலே போலீஸ் நிக்குது. யாரும் பதற்றப்பட வேண்டாம். வண்டிகள் அப்படி அப்படியே நிற்கட் டும்.''

வண்டிகளை இழுத்துப் பிடித்தார்கள்.

''இன்னமுமா போலீஸ்காரன் உயிரோட இருக்கான்?!'' -சீமைச்சாமி முன்னே வந்தார்.

கரையில் வெடித்த ஒரு குண்டுக்குப் பிறகு மறுகுண்டு வெடிக்கவில்லை.

''முருகா... என்ன பண்ணலாம்?'' -முஹம்மது மீரா கேட்டான்.

''கரையில் எதிரி பதுங்கி இருக்கிறான் என்பது நிச்சயம். எவ்வளவு பேர் இருக்கிறார்கள்... என்ன பலத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒன்று செய்யலாம். நான் மட்டும் முன்னே போகிறேன். கரையை நெருங்குகிறபோது, அவர்கள் என்னைத் தாக்குகிற விதத்தில் அவர்களின் பலம் தெரிந்து போகும். அதற்கு ஏற்றவாறு, நீ நம் ஆட்களை இறக்கு!'' பால முருகன் புறப்பட ஆயத்தமானான்.

''ஏய் முருகா..! நானும் வர்றேன்ப்பா!'' -சீமைச்சாமியும் கிளம்பினார்.

''சித்தப்பூ... அவசரப்படாதீங்க. நீங்க வேணாம். பாலமுருகன் மட்டும் போகட்டும்!'' -தடுத்தான் மீரா.

கண்ணெதிரே தனி ஆளாக பாலமுருகன் நடந்து போகிறான். மூச்சை இறுக்கி எல்லோரும் தென் கரை நோக்கி நின்றார்கள். பாலமுருகன் கரையை நெருங்கினான். அமைதியாக இருந்தது. கரை ஏறினான். உச்சிக் கரையிலேறி ஒரு சுற்றுப் பார்த்தான். புதர்கள் அலுங்காமல் இருந்தன. இங்கிருந்தே ஊரைப் பார்த்தான். உறங்கிக் கொண்டிருந்த கமுதிக்குள் இருந்து குதிரை ஏறி வந்தான் செல்லமுத்து. பாலமுருகனைக் கண்டதும் நிறுத்தினான்.

''பாலமுருகா... தங்கச்சாமி அண்ணன் செத்துப் போனாரு! எல்லாரும் பெருநாழிக்கு கௌம்புங்க. மத்த காரியங்களை அப்புறம் பார்க்கலாம்.''

தங்கச்சாமியின் சடலம் கிடத்தப்பட்டிருந்த ரண சிங்கத்தின் வீடு நோக்கி, உடையப்பனும் பொம்மியும் வந்தார்கள். நிறைசூலி பொம்மியை கைத்தாங்கலாக முன்னே தள்ளி, பின்னே வந்தான் உடையப்பன். பத்தடி தூரம் தள்ளி, மண்ணுதின்னியும் வந்து கொண் டிருந்தான்.

அழுதுபுரண்டு கொண்டிருந்த சனம், அழுகையை நிறுத்தி உடையப்பனைப் பார்த்தது. கவிழ்ந்திருந்த ரணசிங்கமும் தலைதூக்கி, தன் வீடு நோக்கி வரும் உடையப்பனைப் பார்த்தான்.

-களிறு பிளிறும்...