Published:Updated:

கெளரவ கொலையை தடுக்க தனிச்சட்டம்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

கெளரவ கொலையை தடுக்க தனிச்சட்டம்:  கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!
கெளரவ கொலையை தடுக்க தனிச்சட்டம்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

கெளரவ கொலையை தடுக்க தனிச்சட்டம்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

சேலம்: தமிழகத்தில் நடக்கும் கெளரவ கொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.

சேலத்தில் இன்று நடந்த கெளரவ கொலைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி ''சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்கிற இன்ஜினியர், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தன்னுடைய தோழியான ஸ்வாதி என்ற பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தார் என்பதற்காக சாதிவெறியர்கள் அவரைக் கடத்தி கொடூரமாக கொலை செய்து தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

கெளரவ கொலையை தடுக்க தனிச்சட்டம்:  கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து கடத்துவது, தாக்குவது அவர்களை கொலை செய்வது போன்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான போக்கு தமிழகத்தில் சமீப காலமாக வளர்ந்து வருகிறது. எனவே கோகுல்ராஜினுடைய படுகொலையை கண்டிக்கும் வகையில் புதிய தமிழகம் கட்சி சார்பாக இந்த  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. கோகுல்ராஜ் இறந்து ஏறக்குறைய 40 தினங்களுக்கு மேலாகிறது. இருந்தாலும் கூட இந்த கொலையிலே சம்பந்தப்பட்ட பிரதானமான குற்றவாளியான தீரன் சின்னமலை பேரவை என்கிற அமைப்பைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

அவர் அந்த பெரிய குற்றத்தை செய்து தப்பித்ததோடு மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலே ஆணவமாக இதுபோன்ற இன்னும் பல படுகொலைகள் நடைபெறும் என்று அவர் தன்னுடைய குரலிலே பேசும் அளவிற்கு தமிழகத்திலே தாழ்த்தப்பட்ட மக்கள் ஏழை எளியமக்கள், சிறுபான்மை மக்கள் ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள். இது வளர்ந்திருக்க கூடிய ஒரு ஜனநாயக நாட்டிற்கு அவமானத்தைத் தேடித்தரக்கூடியது. தமிழகத்தை பொறுத்தமட்டிலும் திராவிட ஆட்சிகள் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றிருக்கின்றன.

கெளரவ கொலையை தடுக்க தனிச்சட்டம்:  கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள் என்றெல்லாம்  பேசக்கூடிய இந்தத் தமிழ் மண்ணில் ஒரு இளைஞன் இன்னொரு பெண்மணியோடு பேசிக்கொண்டிருப்பதே குற்றமாக கருதக்கூடிய அளவில் இருப்பதும், கடத்தி கொலை செய்யக்கூடிய அளவில் இருப்பதுமாக ஒரு மோசமான சமூக சூழல் உருவாகியிருக்கிறது.

எனவே, இந்த சூழல் தடுக்கப்பட வேண்டும் என்று சொன்னால்  மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு தாழ்த்தப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கு ஒரு தனிச்சட்டம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கடந்த இரண்டு ஆண்டுகாலமாக வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்தான போக்கை மாற்ற இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டும்'' என்றார்.

எம்.புண்ணியமூர்த்தி


படங்கள்: பா.காளிமுத்து

அடுத்த கட்டுரைக்கு