Published:Updated:

இந்திய ​எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலி!

Vikatan Correspondent
இந்திய ​எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலி!
இந்திய ​எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலி!

ஜம்மு: ஜம்மு- காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், பெண்கள் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

இந்திய ​எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலி!

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலாகோட் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் இன்று 2 ஆவது நாளாகப்  போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய சுதந்திர தினமான நேற்று, பாலாகோட்டில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 12.30 மணி முதல் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. சிறிய ரக குண்டுகளைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு பெண் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் மட்டும், பாகிஸ்தான் ராணுவம் 5 முறை அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.