Published:Updated:

புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா? சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா?  சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர்

மதுரை: பிலால் மாலிக் உள்ளிட்டவர்களை என்கவுன்டர் செய்யவே, காவல்துறை  புழல் சிறையில் மோதல் நாடகம் நடத்தி இருக்கலாம் பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இந்து அமைப்பு தலைவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் கைதான போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் உயர் பாதுகாப்பு சிறையில் தனியாக உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஜெயிலர் இளவரசனை இவர்கள் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகியோர் அவர்களை திருப்பி தாக்கியதாகவும், பதிலுக்கு வார்டன்களை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, இரவு சிறைக்கு சென்று கைதிகளிடம் சமாதானம் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கைதிகளை பிரித்து பண்ணா இஸ்மாயிலை மதுரை சிறைக்கும், போலீஸ் பக்ருதீனை வேலூருக்கும் பிலால் மாலிக்கை சென்னையிலும் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா?  சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர்

இந்த நிலையில் இன்று நம்மை சந்தித்த பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகம்மது, ‘’ டி.வியில் காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான்  காட்டுகிறார்கள். போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் இவர்களை காட்டவில்லை. 

சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப் பட்டுள்ள இவர்கள் எப்படி  ஒன்றாக சேர முடியும். அப்படியே சேர்ந்தாலும் ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை இவர்களால் தாக்க முடியுமா? அவ்வளவு பலவீனமானதா நமது காவல்துறை?

புழல் சிறைக்கு இவர்கள் மாற்றப்பட்டதில் இருந்து சிறை அதிகாரி இளவரசன் ரொம்பவும் மோசமாக நடந்து கொள்கிறார். நான் மாதம் ஒரு தடவை பார்க்க செல்வேன். என்னையே கடுமையாக திட்டுவார்.

புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா?  சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர்

வழக்கையும் விரைவாக நடத்தாமல் மெதுவாக நடத்தி வருகிறார்கள். இருக்கிற கொலை வழக்கு அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ளார்கள். அவர்களின் குடுமபம், பொருளாதாரம் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறது.

இப்போது சிறையில் நடந்திருப்பதாக சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், இஸ்மாயில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இவர்களை சிறைக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வழக்கை நடத்த முடியாமல் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசு, கைதிகளை ஒரே மாதிரியாக அணுகி அவர்களை காப்பாற்ற வேண்டும்’’ என்றார்.

                                                                                                                                                                              - செ.சல்மான் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு