Election bannerElection banner
Published:Updated:

'அமீர்கான் இந்தியாவின் உண்மையான புதல்வன்!'- பாலிவுட் இயக்குநர்

புதுடெல்லி: அமீர்கான் இந்தியாவின் உண்மையான புதல்வன் என்று பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா  கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அமீர்கான், நாட்டில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள் ஒருவித அச்ச உணர்வினை ஏற்படுத்தியுள்ளதாகவும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி வெளிநாட்டிற்கு செல்லலாம் என்று தன்னுடைய மனைவி கூறியதாகவும் பேசி இருந்தார்.

அமீர்கானின் இந்த கருத்திற்கு அரசியல் கட்சிகள், திரைத்துறையினர் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்ஸ், ரங்க் தே பசந்தி டெல்லி-6, பாக் மில்கா பாக் போன்ற படங்களுக்காகத் தேசிய விருதுகளையும், பிலிம் ஃபேரின் பல விருதுகளையும் பெற்ற ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, ''அமீர்கான் இந்தியாவின் உண்மையான புதல்வன். அவர் யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" என்று அமீர்கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு