Published:Updated:

வியக்கத்தக்க இந்தியா விளம்பர தூதர் பொறுப்பில் இருந்து அமீர்கான் நீக்கம்?

விகடன் விமர்சனக்குழு
வியக்கத்தக்க இந்தியா விளம்பர தூதர் பொறுப்பில் இருந்து அமீர்கான் நீக்கம்?
வியக்கத்தக்க இந்தியா விளம்பர தூதர் பொறுப்பில் இருந்து அமீர்கான் நீக்கம்?
வியக்கத்தக்க இந்தியா விளம்பர தூதர் பொறுப்பில் இருந்து அமீர்கான் நீக்கம்?

புதுடெல்லி: 'வியக்கத்தக்க இந்தியா' திட்டத்தின் விளம்பர தூதர் பொறுப்பில் இருந்து நடிகர் அமீர்கான் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 'வியக்கத்தக்க இந்தியா' என்ற பிரசார திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், 'வியக்கத்தக்க இந்தியா' திட்டத்தின் விளம்பர தூதர் பொறுப்பில் இருந்து அமீர்கான் நீக்கப்பட்டு விட்டதாக நேற்று (6-ம் தேதி) செய்திகள் வெளியாகின.

இந்த தகவலை மத்திய சுற்றுலா அமைச்சம் மறுத்துள்ளது. ''தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வெளியாகும் சில தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த குழப்பத்துக்கும் அதுவே காரணம். அமீர்கான் தொடர்ந்து அந்த பொறுப்பில் நீடிப்பார்'' என அது கூறியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், ''வியக்கத்தக்க இந்தியா திட்டத்திற்காக மெக்கேன் எரிக்சன் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, அதன் விளம்பர தூதராக செயல்பட்டு வந்த அமீர்கானின் ஒப்பந்தமும் முடிவுக்கு வந்து விட்டது'' எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ''இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து விட்டது என்று அமீர்கான் கூறியதால்தான், அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை'' என காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.