Published:Updated:

நாட்டுப்புற இசைஞர் டாக்டர் கே.ஏ.குணசேகரன் உடல்நலக்குறைவால் மறைவு

நாட்டுப்புற இசைஞர் டாக்டர் கே.ஏ.குணசேகரன் உடல்நலக்குறைவால் மறைவு

நாட்டுப்புற இசைஞர் டாக்டர் கே.ஏ.குணசேகரன் உடல்நலக்குறைவால் மறைவு

நாட்டுப்புற இசைஞர் டாக்டர் கே.ஏ.குணசேகரன் உடல்நலக்குறைவால் மறைவு

நாட்டுப்புற இசைஞர் டாக்டர் கே.ஏ.குணசேகரன் உடல்நலக்குறைவால் மறைவு

Published:Updated:
நாட்டுப்புற இசைஞர் டாக்டர் கே.ஏ.குணசேகரன் உடல்நலக்குறைவால் மறைவு
நாட்டுப்புற இசைஞர் டாக்டர் கே.ஏ.குணசேகரன் உடல்நலக்குறைவால் மறைவு

சிறந்த நாட்டுப்புற பாடகர், ஆய்வாளர் மற்றும் புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் நிகழ்கலைத் துறையின் தலைவருமான கே.ஏ.ஜி அன்று அழைக்கப்படும் கே.ஏ.குணசேகரன் உடல் நிலை சரியில்லாமல் இன்று புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

தனித்துவமிக்க நாட்டுப் புறப்பாடகரான இவர்,'தன்னானே 'என்ற இசைக்குழுவை நடத்திவந்தார். தவில், நாதஸ்வரம், உடுக்கை உள்ளிட்டப் பாரம்பரிய இசைக்கருவிகளை இவரின் குழுவினர் அதிர விட்டால் அதைக் கேட்க மக்கள் கூட்டம் அலைமோதும். அரங்கத்தில் இருக்கும் ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் வசியப்படுத்தும் வலிமை இவரின் குரலுக்கு உண்டு. சமஸ்கிருத அரங்கவியலுக்கு மாற்றாக, தலித் அரங்கவியல் என்னும் கோட்பாட்டை உருவாக்கியதில் பெரும்பங்காற்றியவர்.

ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் குரலாக, இடதுசாரி அமைப்புகளின் மேடைகளில் பெரும்பாடகராகத்  திகழ்ந்த இவர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை சிற்றூரில் பிறந்தவர். மதுரை தியாகராசர் கல்லூரி, காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தவர். பி.ஏ.(பொருளாதாரம்) எம்.ஏ (தமிழ் இலக்கியம்) படித்த இவர் நாட்டுப்புற நடனப் பாடல்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். தொன்னூறுகளின் தொடக்கத்தில்தான் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்தார்.சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் பொறுப்பு வகித்தார்.

’சத்திய சோதனை’ ‘அறிகுறி’ ‘தொடு’ ’மாற்றம்’ ‘விருட்சம்’ ‘பலியாடுகள்’உட்பட 12 நாடகங்களை எழுதி இயக்கி இருக்கிறார். இதில் ’சத்திய சோதனை’ நாடகம் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முதுகலைப் பாடத்திட்டத்திலும், ’பலியாடுகள்’நாடகம் புதுச்சேரி பல்கலைக் கழக தமிழ்த் துறையின் பாடத்திட்டத்திலும், காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு பாடத்திலும் இடம்பெற்றிருக்கின்றது.

”சதையும் எலும்பும் நீங்க வச்சதீயில் வேகுதே-ஒங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெ ஊத்துதே
எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க-நாங்க
எரியும்போது எவன் மசுரைப் புடுங்கப் போனீங்க?
மனுசங்கடா... நாங்க... மனுசங்கடா.....

என்ற இன்குலாப்பின் வரிகளுக்கு மெட்டமைத்து தனது குரலின் மூலம் தேசம் முழுவதும் எடுத்துச் சென்றவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்ததால் தாம் பெற்ற அடிகளையும் வலியையும் ’வடு’ என்கிற நாவலின்மூலம் அழுத்தமாகப்  பதிவு செய்திருக்கிறார். மேலும் இவரின்  நாடகங்கள் புதுச்சேரி மற்றும் தமிழகம் என இரு மாநிலங்களின் கலைமாமணி விருதுகளைப் பெற்றிருக்கிறது.

கடந்த சில நாட்களாக சிறுநீரகக் கோளாரால் அவதிப் பட்டு வந்த அவர் புதுச்சேரி கருவடிக் குப்பத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் இன்று காலமானார். 

-ஜெ.முருகன்