Published:Updated:

2013-ம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவர வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை!

விகடன் விமர்சனக்குழு

விழுப்புரம்: கடந்த 2013-ம் ஆண்டு மரக்காணம் அருகே கலவரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி,  மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு பெருவிழா நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள வன்னியர் சங்கம் மற்றும் பாமக கட்சியினர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்களில் சென்றனர். மரக்காணம் அருகே, அவர்கள் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் அவர்களுக்கும்இடையே மோதல் ஏற்பட்டு பயங்கர கலவரமாக மாறியது.

இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பாமக தொண்டர் செல்வராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கலவரம் தொடர்பான வழக்கு திண்டிவனம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் 42 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவியல் கூடுதல் நீதிமன்ற நீதிபதி செல்வ முத்துக்குமாரி இன்று தீர்ப்பளித்தார்.

அதில், கழிக்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன், ரகு, பாரிநாதன், சேகர் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.