Published:Updated:

விமான நிலையங்களுக்குள் உடுருவ முயற்சிப்பவர்களை கண்டதும் சுட உத்தரவு!

புதுடெல்லி: இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள விமான நிலையங்களுக்குள் ஊடுருவ முயற்சிப்பவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 2-ம் தேதி பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்திற்குள் புகுந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 4 நாட்களாக தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடைந்தனர்.

மேலும், குடியரசு தினத்தன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பறந்த மர்ம பலூன் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல் தலைநகர் டெல்லியிலும் மர்ம பலூன் பறந்தது.

இந்நிலையில், இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் குறிப்பாக விமானப்படை தளங்களின் மேல் உரிய அனுமதியின்றி பறக்கும் விமானங்கள் மற்றும் ஊடுருவ முயற்சிப்பவர்களை கண்டதும் சுடுவதற்கு இந்திய விமானப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு