Published:Updated:

கல்லுாரி மாணவிகள் மரணம்; தாளாளர் வாசுகி ஜாமீன் மனு தள்ளுபடி!

கல்லுாரி மாணவிகள் மரணம்; தாளாளர் வாசுகி ஜாமீன் மனு தள்ளுபடி!
கல்லுாரி மாணவிகள் மரணம்; தாளாளர் வாசுகி ஜாமீன் மனு தள்ளுபடி!

சென்னை: கள்ளக்குறிச்சியில் 3  கல்லூரி மாணவிகளின் மர்ம மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கல்லூரி தாளாளர் வாசுகியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவிகள்  பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகியோர் கல்லூரியின் மோசமான நடவடிக்கைகளை எதிர்த்து வந்தனர். இந்நிலையில் அங்குள்ள கிணற்றில் அவர்கள் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதனையடுத்து மாணவிகளின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை,  கல்லூரிக்கு சீல் வைத்ததோடு அக்கல்லூரியின் தாளாளர் வாசுகி,  அவரது மகன் , வாசுகியின் உதவியாளர் வெங்கடேசன் மற்றும் முதல்வர் கலாநிதி ஆகியோரை கைது செய்தது.

கல்லுாரி மாணவிகள் மரணம்; தாளாளர் வாசுகி ஜாமீன் மனு தள்ளுபடி!

இந்நிலையில் தங்களுக்கு ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர்கள் மனு செய்திருந்தனர். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வாசுகியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அதே சமயம் தாளாளர் மகன் சுவாகர் வர்மா, கல்லூரி உதவியாளர் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு