Published:Updated:

7 பேர் விடுதலை குறித்து ஆலோசிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

7 பேர் விடுதலை குறித்து ஆலோசிக்கப்படும்:  ராஜ்நாத் சிங்
7 பேர் விடுதலை குறித்து ஆலோசிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரின் விடுதலை குறித்த ஜெயலலிதாவின் கடிதத்தின் மீது ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 குற்றவாளிகள் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதினார்.  இன்று மக்களவையில் இதுகுறித்து ராஜ்நாத்சிங் பதிலளித்துப்பேசினார்.

7 பேர் விடுதலை குறித்து ஆலோசிக்கப்படும்:  ராஜ்நாத் சிங்

அப்போது அவர், “  ராஜீவ் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எழுதியுள்ள கடிதம் கிடைக்கப்பெற்றது. இதுகுறித்து ஏற்கனவே நீதிமன்றம் சில கருத்துரைக்களை அளித்துள்ளது. சட்டப்படியும் 7 பேர் விடுதலை குறித்து ஆலோசிக்கப்படும்” என்று ராஜநாத்சிங் தெரிவித்தார்

ஆலோசனையின்போது உச்ச நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பின் அம்சங்களும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்" என்றார் அவர்.
 

அடுத்த கட்டுரைக்கு