Published:Updated:

விஜயகாந்திடம் இருந்து 'நோ' சிக்னல்: பொன்.ராதாகிருஷ்ணன்!

விஜயகாந்திடம் இருந்து 'நோ' சிக்னல்: பொன்.ராதாகிருஷ்ணன்!
விஜயகாந்திடம் இருந்து 'நோ' சிக்னல்: பொன்.ராதாகிருஷ்ணன்!

விஜயகாந்திடம் இருந்து 'நோ' சிக்னல்: பொன்.ராதாகிருஷ்ணன்!

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் இருந்து கூட்டணி குறித்து எந்த தகவலும் வரவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கூட்டணி குறித்து விஜயகாந்திடம் இருந்தோ, தே.மு.தி.க. தரப்பில் இருந்தோ இதுவரை எந்த தகவலும் வரவில்லை.

மத்திய அமைச்சர் ஜவடேகர் சென்னை வந்தது பற்றி எனக்கு தெரியாது. கூட்டணி குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது" என்றார்.

ஜவடேகரை புறக்கணித்துவிட்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியூர் சென்றுவிட்டாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''விஜயகாந்த் சென்றது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சென்னை வந்த பிரகாஷ் ஜவடேகர், விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோரை சந்தித்தாரா?, இல்லையா? என்பதும் எனக்கு தெரியாது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு