Published:Updated:

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது:இலங்கையின் தொடர் அச்சுறுத்தல்!

ராமநாதபுரம்: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  4 தமிழக மீனவர்களையும் படகு ஒன்றையும் இலங்கை கடற்படை சிறைப் பிடித்துச் சென்றது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 200 பேர் இந்திய கடல் பகுதியில் நேற்று(புதன்) மீன் பிடித்துவிட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது நடுக் கடலில்  வழிமறித்த இலங்கைக் கடற்படையினர் ஒரு படகையும் 4 மீனவர்களையும் சிறைப்பிடித்து,இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றனர்.அங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

ஏற்கெனவே இலங்கைச் சிறையில் 84 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.அதற்கு உரிய பதிலையோ நடவடிக்கையையோ  பாஜக அரசு எடுக்காமல் உள்ள நிலையில் தொடரும் கைதுகள் தமிழக மீனவர்களை  பீதியில் ஆழ்த்தியுள்ளது.

-மோகன்
     
அடுத்த கட்டுரைக்கு