Published:Updated:

தமிழக மீனவர்கள் 40 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு: மீனவர்கள் அதிர்ச்சி!

தமிழக மீனவர்கள் 40 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு: மீனவர்கள் அதிர்ச்சி!
தமிழக மீனவர்கள் 40 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு: மீனவர்கள் அதிர்ச்சி!

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 40 பேருக்கு இலங்கை நீதிமன்றம் மீண்டும் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் 40 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு: மீனவர்கள் அதிர்ச்சி!

கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 40 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். கடற்படையின் விசாரணைக்கு பின் மீனவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

40 மீனவர்களின் காவல் முடிவடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றதில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.  தமிழக மீனவர்களை, வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மீனவர்கள் அனைவரும் வவுனியா சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கபட்டு உள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 96 பேர் இன்று விடுதலை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் 40 மீனவர்களின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது, தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- இரா.மோகன்

அடுத்த கட்டுரைக்கு