Published:Updated:

கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மீது அரசு கூறும் பகீர் புகார் இதுதான்!

கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மீது அரசு கூறும் பகீர் புகார் இதுதான்!
கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மீது அரசு கூறும் பகீர் புகார் இதுதான்!

கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிக்கும் மேலூர் நீதிமன்ற நீதிபதி மீது தமிழக அரசு கூறிய புகாரை தொடர்ந்து,  அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது.

கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மீது அரசு கூறும் பகீர் புகார் இதுதான்!

மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகளை மேலூர் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி விசாரித்து வருகிறார். இந்த நிலையில் நீதிபதி பூபதிக்கு எதிராக அரசு வழக்கறிஞர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பரபரப்பு புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், கிரானைட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டவர்களுக்கு எதிராக 98 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அனைத்து பிரிவுகளிலும் வழக்கை விசாரிக்க ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், குறிப்பிட்ட வழக்குகளை மட்டும் நீதிபதி பூபதி விசாரிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை, நீதிபதி மகேந்திர பூபதிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.
 

அடுத்த கட்டுரைக்கு