Published:Updated:

'இரட்டை இலை சின்னம், எம்.ஜி.ஆர். படம் இல்லாமல் சேவல் சின்னத்தில் நிக்க முடியுமா?'- விளாசும் விஜயகாந்த் (வீடியோ)

தேவகோட்டை: இரட்டை இலை சின்னம், எம்.ஜி.ஆர். படம் இல்லாமல் சேவல் சின்னத்தில் தேர்தலில் நிக்க முடியுமா? என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேவகோட்டையில் பிரசாரம் மேற்கொண்டபோது, ''தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விஷ செடிகள். மக்களுக்காக நான் என்று கூறும் ஜெயலலிதாவுக்கு ஏழைகளின் பசி பற்றித் தெரியுமா?

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு என பெயர் வைத்துள்ள ஜெயலலிதா, இதற்கு எல்லாம் எம்.ஜி.ஆர். பெயரை வைக்க முடியுமா? நான் கேட்கிறேன் அம்மா... அம்மா... என்கிறீர்களே இந்த அம்மா பட்டம் யார் கொடுத்தது. நீங்களாக வைத்தது அம்மா. சரி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சின்னத்தை எடுத்துவிட்டு புரட்சித் தலைவர் குடிநீர் திட்டம்ன்னு வைக்கிறீங்களா?, புரட்சித் தலைவர் உணவகம்ன்னு வைக்கிறீங்களா இல்லல.

அப்ப நான் என்ன கேட்கிறேன், உங்களுடைய சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடுங்க. இரட்டை இலை சின்னத்தை தூக்கிடுங்க. எம்.ஜி.ஆர். படத்தை தூக்கிடுங்க. நீங்க சேவல் சின்னத்தில் நில்லுங்க பார்ப்போம். சேவல் சின்னத்தில் நின்னா தோத்துடுவோம்ன்னு பயமா? ஏன் தேர்தல் நேரத்தில் மட்டும் எம்.ஜி.ஆர். படத்தை ஒட்டணும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு