Published:Updated:

விஜய் மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துக்கள் முடக்கம்! -அமலாக்கத்துறை அதிரடி!

Vikatan Correspondent
விஜய் மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துக்கள் முடக்கம்! -அமலாக்கத்துறை அதிரடி!
விஜய் மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துக்கள் முடக்கம்! -அமலாக்கத்துறை அதிரடி!
விஜய் மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துக்கள் முடக்கம்! -அமலாக்கத்துறை அதிரடி!

புதுடெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துக்களை முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவருமான விஜய் மல்லையா, 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாததாக வழக்கு தொடரப்பட்டது. ஐ.டி.பி.ஐ வங்கியில் விதிமுறைகளை மீறி ரூ.900 கோடி கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோல் யூனியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் மொத்தமாக ரூ.7,000 கோடி கடன் பெற்று மல்லையா மோசடியில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து தப்பி சென்று லண்டனில் தஞ்சமடைந்துள்ளார்.

மேலும், அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் பதிவு செய்துள்ள வழக்கு மற்றும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவர், இந்தியாவுக்கு திரும்பி வந்து, தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கு மறுத்து விட்டார்.

அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, பிரிட்டன் அரசின் உதவியை இந்திய அரசு நாடியுள்ளது. மேலும், விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிக்க வேண்டும் என்று பண மோசடித் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திடம் அமலாக்கத் துறை நேற்று கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்துள்ளது.

விஜய் மல்லையாவை விசாரணைக்காக இந்தியா அழைத்துவர மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், ஐ.டி.பி.ஐ வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத வழக்கில், விஜய் மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துக்களை முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.