Published:Updated:

குருக்களுக்கு துப்பாக்கி: கோயில் பாதுகாப்புக்கு அதிரடி!

குருக்களுக்கு துப்பாக்கி: கோயில் பாதுகாப்புக்கு அதிரடி!
குருக்களுக்கு துப்பாக்கி: கோயில் பாதுகாப்புக்கு அதிரடி!

ம் ஊர் பழங்கால கோயில்களும், கோயில் சிலைகளும் நம் தேசத்தின் வரலாற்றுச் சிறப்புக்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆனால், சமீப ஆண்டுகளாக தமிழகம் முதல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களை குறிவைத்து, அங்கிருக்கும் சுவாமி சிலைகள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகின்றன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களையும், கோயில் சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, இந்தியா முழுமைக்கும் அனைத்து தரப்பிலிருந்தும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்பட்டன.

முக்கியமாக இந்தியாவின் பிற மாநிலங்களைக் காட்டிலும் ஹிமாச்சல பிரதேசத்தில் சுவாமி சிலைகளையும், சுவாமி நகைகளையும் கடத்தும் கும்பல், கோயிலில் உள்ள குருக்களையும், காவலர்களையும் பல நேரங்களில் கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். குறிப்பாக அங்குள்ள குலு மாவட்டத்தில் 200க்கம் முற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட கோயில்கள் மற்றும் மடங்களில் சுவாமி சிலைகள் மற்றும் நகைகள் கொள்யைடிக்கப்பட்டன. அம்மாநிலத்தில் இது தொடர்கதையாகி வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஹிமாச்சல பிரதேச அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பழங்கால பெருமைகள்கொண்ட கோயில்கள் மற்றும் மடங்களில் கண்காணிப்பு மேரா பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், கோயில் குருக்கள் மற்றும் காவலர்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் பெற்று துப்பாக்கிகளை பயன்படுத்திக்கொள்ளவும் மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கோயில்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. தமிழகத்தில் 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோயில்களில், நான்கு லட்சத்துக்கு அதிகமான சிலைகள் இருப்பதாகவும் புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், தமிழக கோயில்கள் உள்ள பாரம்பரிய சிலைகளைக் காக்கும் வகையில், தமிழக அரசு இதுபோன்ற சில அதிரடி நடவடிக்கைளை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-ரா.வளன்