Published:Updated:

சிவகார்த்திகேயன் மட்டுமல்ல நானும் பாதிக்கப்பட்டேன்: விஷால்

சிவகார்த்திகேயன் மட்டுமல்ல நானும் பாதிக்கப்பட்டேன்: விஷால்
சிவகார்த்திகேயன் மட்டுமல்ல நானும் பாதிக்கப்பட்டேன்: விஷால்

சிவகார்த்திகேயன் மட்டுமல்ல நானும் பாதிக்கப்பட்டேன்: விஷால்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!


சிவகார்த்திகேயன் மட்டும் பாதிக்கப்படவில்லை, நானும் ஒரு காலத்தில் கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கூறினார். 

தன்னுடைய படங்களை வெளியிட முடியாமல் சிலர் திட்டமிட்டு சதி செய்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சிவகார்த்திகேயனின் இந்த புகார் குறித்து காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், சிவகார்த்திகேயன் மட்டும் பாதிக்கப்படவில்லை, நானும் ஒரு காலத்தில் கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். இருந்தாலும் சிவகார்த்திகேயன் அளித்த புகாரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

மேலும், நடிகர் சங்கத்தின் மீதான ஊழல் புகாருக்கு எதிரான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என்றும் விஷால் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு