Published:Updated:

விளையாட்டு வீராங்கனைக்கு அரசு பணி!

Vikatan Correspondent
விளையாட்டு வீராங்கனைக்கு அரசு பணி!
விளையாட்டு வீராங்கனைக்கு அரசு பணி!
விளையாட்டு வீராங்கனைக்கு அரசு பணி!

விளையாட்டு வீராங்கனை சாந்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தடகள பயிற்றுநராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், காதக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செல்வி. எஸ். சாந்தி,  தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட தடகள விளையாட்டு வீராங்கணை. அவர் பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று, 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெறுமை சேர்த்துள்ளார். 

அவரின் சாதனையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தடகள பயிற்றுநராகச், சிறப்பினமாகக் கருதி பணியமர்த்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிறப்பு விளையாட்டு விடுதியில் (மகளிர்) தடகள பயிற்றுநராகப் பணி வழங்கப்பட்டுள்ளது.  அப்பணி வழங்கியமைக்கான பணி நியமன ஆணையினை பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், எஸ். சாந்திக்கு  வழங்கினார்.