Election bannerElection banner
Published:Updated:

சினிமா பாணியில் அதிரடி காட்டிய பொன்.மாணிக்கவேல் டீம்!

கடலூரில் சிலை கடத்தல்காரர்கள் ஐந்து பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1600 வருட பழமையான பல்லவர் கால விநாயகர் சிலையின் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி. ஒன்றரை அடி உயரமுள்ள இந்தச் சிலையின் எடை 25 கிலோ. மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒரு பழமையான கோயிலில் இருந்து இந்தச் சிலை கடத்திவரப்பட்டது தெரியவந்துள்ளது.

சினிமா பாணியில் அதிரடி காட்டிய பொன்.மாணிக்கவேல் டீம்!

புதுச்சேரியைச் சேர்ந்த ஞானசேகரன், முகுந்தன், மயிலாடுதுறையைச் சேர்ந்த வினோத், ராஜா, செந்தில்வேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இருக்கும் ஒரு கார் ஸ்டாண்டில் வைத்து சிலையைக் கைமாற்றிய போது இவர்கள் சிக்கினர். இந்தச் சிலைக்கடத்தல் குறித்த ரகசிய தகவலை மூன்று நாள்களுக்கு முன்பே கடலூர் எஸ்.பி விஜயகுமார், சிலைக்கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்குத் தெரிவித்திருந்தாராம். அதன்பேரில், கடலூரில் முகாமிட்டு கண்காணித்து வந்துள்ளார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்.

சினிமா பாணியில் அதிரடி காட்டிய பொன்.மாணிக்கவேல் டீம்!
சினிமா பாணியில் அதிரடி காட்டிய பொன்.மாணிக்கவேல் டீம்!

இந்நிலையில், இன்று மக்கள் மத்தியில் இவர்கள் சிலையைக் கைமாற்றியபோது மடக்கிப் பிடித்துள்ளனர். அதிலிருந்த சிலர் மக்கள் மத்தியில் ஓடும்போது துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சிலை இங்கிருந்து இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வெளிநாட்டுக்குக் கடத்தப்படுகிறது. இதற்கு, சிலைக் கடத்தல் பின்னணியில் சுபாஷ் கபூரின் முக்கிய கூட்டாளியான புதுச்சேரியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் மறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

செய்தி, படங்கள்: க.பூபாலன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு