Published:Updated:

டீசல்,கேஸ் விலை உயராது: ஜெய்பால் ரெட்டி

டீசல்,கேஸ் விலை உயராது: ஜெய்பால் ரெட்டி
டீசல்,கேஸ் விலை உயராது: ஜெய்பால் ரெட்டி
டீசல்,கேஸ் விலை உயராது: ஜெய்பால் ரெட்டி

புதுடெல்லி:டீசல் மற்றும் சமையல் கேஸ் ஆகியவற்றின் விலை இப்போதைக்கு உயராது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

“டீசல் மற்றும் கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்துவது குறித்து நாங்கள் பரிசீலிக்கவில்லை.இப்போதைக்கு இந்த கேள்வி தேவையில்லை” என்று ஜெய்ப்பால் ரெட்டி மேலும் கூறினார்.

எரிபொருள் மீதான விலையேற்றம் பணவீக்கத்தில் எந்த அளவுக்கு  தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனப்து குறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் இன்று ஆலோசனை நடத்திய பின்னரே ஜெய்ப்பால் ரெட்டி இவ்வாறு கூறினார்.

முன்னதாக டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் உயர்த்தப்படலாம் என்று செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.