Published:Updated:

பத்திரிகையாளர்களைத் தாக்கிய டோல்கேட் ஊழியர் கைது: துப்பாக்கி பறிமுதல்..!

ஜெ.முருகன்
பத்திரிகையாளர்களைத் தாக்கிய டோல்கேட் ஊழியர் கைது: துப்பாக்கி பறிமுதல்..!
பத்திரிகையாளர்களைத் தாக்கிய டோல்கேட் ஊழியர் கைது: துப்பாக்கி பறிமுதல்..!

விழுப்புரம் சுங்கச்சாவடியில் பத்திரிகையாளர் நான்கு பேரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியரை போலீஸ் கைது செய்து, அவர் வைத்திருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்தது. 

பத்திரிகையாளர்களைத் தாக்கிய டோல்கேட் ஊழியர் கைது: துப்பாக்கி பறிமுதல்..!

திருச்சியில் இருந்து நான்கு பத்திரிகையாளர்கள் காரில் விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு முதல்நாள் செல்லும்போதே ரிட்டர்னுக்கும் சேர்த்து வாங்கிவிட்டோம் என்று சொல்லி பணம் கட்டிய ரசீதைத் தேடிக் கொடுத்துவிட்டார்கள். ஆனால் அதற்குள் டோல்கேட் ஊழியர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது சுங்கச்சாவடியில் பணிபுரியும் வடமாநில ஊழியர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் காவல்துறையில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் பீகாரைச் சேர்ந்த ராகேஷ் என்ற சுங்கச்சாவடி ஊழியரை கைது செய்த போலீஸார், அவர் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.