Published:Updated:

6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மதபோதகர் கைது!

6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மதபோதகர் கைது!
6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மதபோதகர் கைது!

6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மதபோதகர் கைது!

6 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக, மதபோதகர் ஒருவர் திருச்சியில் கைதுசெய்யப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மதபோதகர் கைது!

திருச்சி, கருமண்டபம் பொன்நகர் பகுதியில் இயங்கிவரும் திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபைக்குச் சொந்தமான 70 சென்ட் இடத்தை, அந்தச் சபையின் தலைமைப் போதகர் மற்றும் முக்கியமான நிர்வாகிகள், சென்னையைச்  சேர்ந்த வி.ஜி.பி ஹவுசிங் பிரைவேட் லிமிட் எனும் நிறுவனத்துக்கு ரூபாய் 7 கோடிக்கு விற்பதாக ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்பிறகு நடந்ததை, வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனத்தின் துணைத்தலைவர் தங்கையா நம்மிடம் விவரித்தார், “இந்த ஏ.ஜி சர்ச் என்பது மிகப்பெரிய திருச்சபை. நாடு முழுவதும் அதற்கு கிளைகள் உள்ளன. அந்த நம்பிக்கையில்தான் நாங்கள், சபையின் முக்கிய நிர்வாகிகள், ஒப்புதல் வழங்கியதாக ஆவணங்கள் கொடுத்ததன் அடிப்படையில், ஏ.ஜி சபைக்குச் சொந்தமான இடத்தை வாங்கிட 2011-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டோம். அந்த ஒப்பந்தப்படி, 6 கோடியே 88 லட்சம் பணத்தை வங்கியின்மூலம், சபைக்கு நாங்கள்  செலுத்தியுள்ளோம். மேலும், நிலத்தை எழுதித் தரும்போது மீதமுள்ள ரூபாய் 12 லட்சத்தைத் தருவதாக தலைமை போதகர் நார்மன் பாஸ்கரிடம் கூறியிருந்தோம். அதற்கு அவரும் சம்மதித்தார். ஆனால், அவர்கள் சொன்னபடி, திருச்சபை நிலத்தை நார்மன் பாஸ்கர் எழுதிக் கொடுக்கவில்லை.

6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மதபோதகர் கைது!

நாங்கள் பலமுறை நேரில் கேட்டோம். ஆனாலும் இழுத்தடித்தார். இந்நிலையில்தான் கடந்த வருடம் எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நிலத்தை எழுதிக்கொடுக்காமல், மோசடிசெய்யும் தலைமைப் போதகர் நார்மன் பாஸ்கர் மற்றும் சபையில் உள்ள கமிட்டி உறுப்பினர் ஸ்டாலின் மாணிக்கராஜ், ஸ்டீஃபன் ஜெயக்குமார், ஆபிரகாம் தாமஸ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குத் தொடர்ந்தோம். திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், நார்மன் பாஸ்கரைத் தவிர மற்றவர்கள் நார்மன் பாஸ்கர் தன்னிச்சையாக நிலத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டதாகவும், இதில் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் கூறி முன் ஜாமீன் வாங்கினார்கள். நார்மன் பாஸ்கரின் முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதால், தலைமறைவானார். அடுத்து, அவர் சபையை விட்டு நீக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

எங்களுடன்  போடப்பட்ட ஒப்பந்தப்படி, நிலம் கொடுக்காமல் மோசடி செய்த தலைமைப் போதகர் நார்மன் பாஸ்கர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நாங்கள் அடுத்தடுத்து எடுத்த முயற்சியின் காரணமாக, திருச்சி கண்டோன்மென்ட் போலீஸார் அவரைக் கைதுசெய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு