Published:Updated:

வீரபாண்டி ஆறுமுகம் மீது மற்றொரு நில அபகரிப்பு புகார்!

வீரபாண்டி ஆறுமுகம் மீது மற்றொரு நில அபகரிப்பு புகார்!
வீரபாண்டி ஆறுமுகம் மீது மற்றொரு நில அபகரிப்பு புகார்!
வீரபாண்டி ஆறுமுகம் மீது மற்றொரு நில அபகரிப்பு புகார்!

சேலம்: ரூ 2 கோடி மதிப்பிலான நிலத்தை மிரட்டி பறித்துக்கொண்டதாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது மற்றொரு நில அபகரிப்பு புகார் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ வீரரான என். சண்முகம்(50),என்பவர் இது தொடர்பாக சேலம் மாவட்ட கண்காணிப்பாளரிடம்  அளித்துள்ள புகாரில்,”உத்தமசோழபுரம் சிரஸ்தர்காட்டில் எனது தந்தை கே.நல்லப்பனுக்கு(75)  சொந்தமாக 2.36 ஏக்கர் நிலம் இருந்தது.இந்த நிலையில் அப்பகுதியில் ஐடி பார்க் வரவிருப்பதாகக் கூறி வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் சேகரும் முன்னாள் தாசில்தார் ஸ்ரீரங்கநாதரும் அந்த நிலத்தை வீரபாண்டி ஆறுமுகத்திடம் தருமாறு அவரிடம் கேட்டுள்ளனர்.

அப்படி நிலத்தை தராவிட்டால் அரசு நிலத்தை குறைந்தவிலைக்கு எடுத்துக் கொள்ளும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நல்லப்பன் தரமறுத்துள்ளார். எனவே அவரை அழைத்துக் கொண்டு வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு நல்லப்பனை மிரட்டி நிலத்தை பத்திரம் செய்து கொண்டனர்.

அதில் எனக்கு சேர வேண்டிய 0.57 சென்ட் நிலத்தை எனது கையெழுத்து இல்லாமல் பத்திரம் செய்துள்ளனர்.அந்த நிலத்தின் மதிப்பு தற்போது ரூ 2 கோடி இருக்கும். எனவே மோசடியாக நிலத்தை பறித்துக் கொண்ட வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா, வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் சேகர், முன்னாள் தாசில்தார் ஸ்ரீரங்கநாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.