Published:Updated:

பெண் சப்-கலெக்டரை காதலித்து கரம்பிடித்த எம்எல்ஏ!

கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சபரிநாதனுக்கும், திருவனந்தபுரம் மாவட்ட சப்-கலெக்டர் திவ்யா எஸ்.அய்யருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவிலில் உள்ள முருகன்கோயிலில் இன்று திருமணம் நடைபெற்றது.

கேரள முன்னாள் சபாநாயகர் கார்த்திகேயனின் மகன் சபரிநாதன், தற்போது அருவிக்கரை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருவனந்தபுரம் சேஷா அய்யரின் மகள் திவ்யா, சப்-கலெக்டர். சபரிநாதனும் திவ்யாவும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்டபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரின் வீட்டிலும் பெற்றோரின் எதிர்ப்பு இல்லை. இதனால் திருமணத்தை கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவிலில் உள்ள முருகன்கோயிலில் வைத்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மணமக்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்த பிரபலங்களாக இருந்தாலும், தமிழகப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் வைத்து நடத்துவதற்கு பின்புலமாக அவர்களின் பாரம்பர்யம்  இருக்கிறது.

பெண் சப்-கலெக்டரை காதலித்து கரம்பிடித்த எம்எல்ஏ!

சபரிநாதனின்  தாத்தா கோபாலபிள்ளை, பாட்டி வனசாட்சி ஆகியோரின் குடும்ப தெய்வமாக குமாரகோவில் முருகன் இருந்துள்ளார். அவர்கள் தங்கள் மகனான முன்னாள் சபாநாயகர் கார்த்திகேயனுக்கு 1949-ம் ஆண்டு குமாரகோவில் முருகன் சந்நிதியில் வைத்து பெயர் வைத்துள்ளனர். அதனால்  குமாரகோவில் முருகன் கோயிலில் வைத்து சபரிநாதனுக்கும் திவ்யாவுக்கும் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதைப்போல மணமகள் திவ்யாவின் தந்தை சேஷா அய்யரும் மகளின் திருமணத்தை குமாரகோவிலில் வைத்து நடத்த திட்டமிட்டு இருந்தார். இரண்டு வீட்டு எண்ணமும் ஒன்றாக இன்று நிறைவேறியது. இதற்கு இன்னொரு காரணம், 1956 நவம்பர் 1-ம் தேதிக்கு முன்பு வரை கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவோடு ஒருங்கிணைந்த திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்தது. அதனால் கேரளாவைச் சேர்ந்த இவர்களுக்கு குமாரகோவிலோடு தொடர்பும் இருந்துள்ளது. சபரிநாதன்- திவ்யா திருமணம் இன்று காலை 9.30 மணிக்கு குமாரகோவிலில் நடைபெற்றது. கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, முன்னாள் அமைச்சர் கே.சி.ஜோசப் உள்ளிட்டவர்கள்  மணமக்களை வாழ்த்தினர்.