Published:Updated:

பணத்தைக் களவாட இரண்டே நிமிடம்தான்..! கதிகலக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள்

பணத்தைக் களவாட இரண்டே நிமிடம்தான்..! கதிகலக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள்
பணத்தைக் களவாட இரண்டே நிமிடம்தான்..! கதிகலக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள்

பணத்தைக் களவாட இரண்டே நிமிடம்தான்..! கதிகலக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள்

தொடரும் ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்களால் ஜெயங்கொண்டம் மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். அடுத்தடுத்து மூன்று சம்பவங்களில் காவல்துறையே அதிர்ந்து போய் உள்ளது.

பணத்தைக் களவாட இரண்டே நிமிடம்தான்..! கதிகலக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள்

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மேலூர் கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் இளவரசன். இவர் நேற்று காலை 10 மணியளவில் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள எஸ்பிஐ  ஏடிஎம்.மில் 31,500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, சந்தை வழியாக நடந்து சென்றபோது, பின்னால் வந்த சுந்தரராஜன் என்பவர் இளவரசனின் கழுத்தில் கத்தியை வைத்து, 'சத்தம் போட்டால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிடுவேன்' என மிரட்டி பணத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓடியுள்ளார். பின்பு இளவரசன் கத்தியதும் கடைவீதியில் இருந்தவர்கள் பிடிக்க முயன்றுள்ளனர். அவர்களைக் கத்தி, அரிவாளை காண்பித்து மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து இளவரசன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதேபோன்று ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோடங்குடி மெயின்ரோட்டில் வசித்து வரும் சீனிவாசன் என்பவரின் மனைவி சரோஜா கடந்த 21-ம் தேதி ஜெயங்கொண்டம் சன்னதித் தெருவில் உள்ள ஏடிஎம். மையத்தில், ரூ.2 ஆயிரத்தை எடுத்துள்ளார். அப்போது மீதி பேலன்ஸ் காட்டாததால் அருகில் நின்றுகொண்டிருந்த நபர், தான் பார்த்துச் சொல்கிறேன். உங்கள் கார்டை கொடுங்கள் என்று சொல்லி பேலன்ஸ் பார்த்துள்ளார். அப்போது, அவர் கணக்கில் ரூ.44,520 இருந்துள்ளது. பேலன்ஸ் சிலிப் வேறு எடுத்துக் கொடுத்ததோடு போலியான வேறு ஏடிஎம். கார்டை கொடுத்து அவரை அனுப்பிவிட்டார்.

பின்னர், சரோஜா கடந்த 28-ம் தேதி பணம் எடுப்பதற்காக ஏடிஎம். சென்று பணம் எடுத்தபோது கார்டு வேலை செய்யாததால், அவர் கணக்கு வைத்திருக்கும் கனரா வங்கியில் சென்று சரி பார்த்தபோது 21-ம் தேதி அவருடைய கணக்கிலிருந்து அனைத்து பணமும் எடுக்கப்பட்டுள்ளதாக பேங்கில் சொல்லியிருக்கிறார்கள். அதிர்ச்சி அடைந்த சரோஜா பேங்கியிலேயே மயக்கிவிழுந்துள்ளார். அங்குள்ளவர்கள் போலீஸாரிடம் புகார் கொடுங்கள் என்று சொன்னபோது எஸ்.ஐ. சுப்ரமணியனிடம் புகார் கொடுத்துள்ளார். அவரும் விசாரித்து வந்துள்ளார்.

பணத்தைக் களவாட இரண்டே நிமிடம்தான்..! கதிகலக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள்

இதேபோன்று சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வரும் செல்வராஜ் கடந்த 28-ம் தேதி உறவினர் வீட்டுத் திருமணத்துக்காக ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவல் கிராமத்துக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்குச் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது பணம் எடுப்பதற்காக பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்பிஐ ஏடிஎம்-க்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த ஒருவரிடம் ரூ.500 பணம் எடுத்துக்கொடுக்க கூறியுள்ளார். அந்த நபரும் பணத்தை எடுத்துக்கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு செல்வராஜ் சென்னை பேருந்தில் ஏறி சிறிது தூரம் சென்றுகொண்டிருந்தபோது, அவரது செல்போனுக்கு இரண்டு மெசேஜ் வந்துள்ளது.

அதனைப் பார்த்தபோது ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.9,500 பணம் எடுத்துள்ளதாக வந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்தவர், தனது பையில் உள்ள ஏடிஎம். கார்டை பார்த்தபோது அது போலியான கார்டு என தெரியவந்தது. இதையடுத்து பேருந்தில் இருந்து இறங்கி ஜெயங்கொண்டம் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில், சிறப்பு எஸ்.ஐ. தமிழரசன் வழக்குப் பதிந்து விசாரித்து வந்துள்ளார்.

பணத்தைக் களவாட இரண்டே நிமிடம்தான்..! கதிகலக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள்

இதுகுறித்து காவலர்களிடம் கேட்டபோது, "பத்துபேர் சேர்ந்து கூட்டாக கொள்ளையடித்துள்ளனர். இதில் இரண்டு பெண்களும் இருந்துள்ளனர். ஏடிஎம்-மில் பணம் எடுத்துச் செல்பவர்களை கண்காணித்து அவர்கள் பின் தொடர்ந்து அவர்களிடம் பணம் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம். இப்போதுதான் சுந்தரராஜனை கைது செய்துள்ளோம். இன்னும் பலரை தேடி வருகிறோம். எல்லோரும் பிடிபட்டதும் இவர்களின் நூதன கைவரிசை சொல்கிறோம்" என்று முடித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு