Published:Updated:

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸாருடன் பொதுமக்கள் மோதல்!

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸாருடன் பொதுமக்கள் மோதல்!
News
டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸாருடன் பொதுமக்கள் மோதல்!

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸாருடன் பொதுமக்கள் மோதல்!

டாஸ்மாக் மதுக்கடையை அடைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய மக்களை போலீஸார் அப்புறப்படுத்த முயற்சி செய்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் இலவன்குளம் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி ஏற்கெனவே அதிகாரிகளிடம் மனு அளித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 300-க்கும் அதிகமானோர் சாலையில் ஊர்வலமாக மதுக்கடையை நோக்கி வந்தனர். 

பொதுமக்கள் மதுக்கடையை முற்றுகையிட முயற்சி செய்தனர். அதற்கு போலீஸார் அனுமதிக்கவில்லை. அனுமதி இல்லாமல் சாலையில் பேரணியாக வருவது தவறு என்றும் அரசு அனுமதி அளித்து திறக்கப்பட்டிருக்கும் மதுக்கடைக்கு எதிராகப் போராடக்கூடாது எனவும் போலீஸார் எச்சரித்தனர். ஆனால், பொதுமக்கள் தொடர்ந்து முன்னேறியபடி இருந்தனர். இதனால் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ’’இலவன்குளம் சாலை, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி. இந்த வழியாக பெண்கள், குழந்தைகள் அதிகமாகச் செல்வார்கள். ஆனால், இந்தப் பகுதியில் மதுக்கடையை திறந்து வைத்திருப்பது எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த மதுக்கடையின் அருகிலேயே பள்ளிக்கூடம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. பகலிலும் இரவிலும் இந்த மதுக்கடைக்கு வரக்கூடியவர்கள் குடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடக்கிறார்கள். பெண்கள் இந்த வழியாகச் சென்றால் அவதூறாகப் பேசி அருவருக்கத் தகுந்த வகையில் நடக்கிறார்கள். அதனால், பெண்களால் பகலில் கூட சாலையில் நடக்க முடியாத நிலைமை உள்ளது. 

இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை மனுக் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மதுக்கடையை அகற்றும் வரையிலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய போலீஸார் மதுக்கடைக்குப் பாதுகாப்பு கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. மதுக்கடையை இருப்பதால்தான் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அதனால், அதனை அகற்ற வலியுறுத்தும் எங்களை அச்சுறுத்துவது எந்த வகையில் நியாயம்? இந்த மதுக்கடையை இங்கிருந்து அகற்றும் வரையிலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார்கள் ஆவேசத்துடன்.

மக்கள் விரும்பாத இடங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவதில் அதிகாரிகளுக்கு என்ன தயக்கமோ?