Published:Updated:

கச்சத் தீவை இந்தியா உடனே கைப்பற்ற வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்

Vikatan Correspondent
கச்சத் தீவை இந்தியா உடனே கைப்பற்ற வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்
கச்சத் தீவை இந்தியா உடனே கைப்பற்ற வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்
கச்சத் தீவை இந்தியா உடனே கைப்பற்ற வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்

சென்னை: தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில்,கச்சத் தீவை  இந்தியா உடனே கைப்பற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்து்ள்ள அறிக்கையில்,"தமிழக மீனவர்கள் தொடர்ந்து  தாக்கப்பட்டு வருகிறார்கள். எத்தனையோ தூதுக்குழுக்கள், அதிகாரிகள் மட்டத்திலான  பேச்சுவார்த்தை, அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள்  நடத்தப்பட்டுவிட்டன.
எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

பொழுது போக்கில் ஈடுபடுவதைப்போல, மீண்டும் படகுகள் கடத்தபடுவதும், மீனவர்கள்  கொல்லப்படுவதும் தொடர் கதையாகிவிட்டது.

மீனவர்கள் கொல்லப்படுவதை தடுப்பதற்கு ஓரே வழி கச்சத்தீவை மீண்டும் கைப்பற்றுவது  தான் என்பதை தமிழக சட்டமன்றம் ஏக மனதாக தீர்மானமாக இயற்றியுள்ளது.

இதைப்பற்றிய எந்த பதிலையும் இது நாள்வரை மத்திய அரசு வெளியிடவில்லை.  மீனவர்களையும், படகுளையும் கடத்தியதை வன்மையாக கண்டிக்கும் இந்திய  கம்யூனிஸ்டு கட்சி, கச்சத் தீவை உடனடியாக மீட்க வேண்டும் என்பதையும்  வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார்.