Published:Updated:

''பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால், 3-வது நாட்டு ராணுவம் காஷ்மீரில் நுழையும்!''- சீன மீடியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
''பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால், 3-வது நாட்டு ராணுவம் காஷ்மீரில் நுழையும்!''- சீன மீடியா
''பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால், 3-வது நாட்டு ராணுவம் காஷ்மீரில் நுழையும்!''- சீன மீடியா

''பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால், 3-வது நாட்டு ராணுவம் காஷ்மீரில் நுழையும்!''- சீன மீடியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால், 3-வது நாட்டு ராணுவம் காஷ்மீருக்குள் நுழையும் என்று சீன அரசு மீடியாவான 'குளோபல் டைம்ஸ்' இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில்,  '' பூடானில் டோக்லம் பகுதியில்  சீனத்துருப்புகள் சாலை அமைப்பதை இந்தியப்படைகள் தடுத்துள்ளன. பூடான் நாடு கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா கூறுகிறது. அதே நடைமுறையை சீனாவும் கடைபிடிக்க வேண்டியது இருக்கும். பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால், 3-வது நாட்டு  ராணுவம் காஷ்மீரில் நுழையும். இந்தியா பூடானுக்கு உதவவில்லை. மாறாக அந்த நாட்டுக்கு உதவி செய்யும் போர்வையில் பூடானை பயன்படுத்திக் கொள்கிறது '' எனக் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் வெஸ்ட் நார்மல் பல்கலைக்கழகத்தின் இந்திய கல்வித்துறை இயக்குநர் லாங் ஜிங்ஜிவான் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். பூடானின் டோகலம்  இந்தியா, சீனா மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் பகுதி. இதை, டோங்லாங் என்ற பெயரில் அழைக்கும் சீனா உரிமைக் கொண்டாடிவருகிறது. பூடானுக்கும் சீனாவுக்கும் தூதரக உறவு கிடையாது. அதனால், இந்தியா உதவியுடன்தான் சீனாவை பூடான்  எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. டோக்லம் விவகாரத்தில் குளோபல் டைம்ஸ் இந்தியாவை எச்சரிக்கும் வகையில் பல செய்திகள் வெளியிட்டுள்ளது. எனினும்,  பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை டோக்லாம் விவகாரத்தில் இணைத்து முடிச்சுப் போட்டது கிடையாது. முதன்முறையாக காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு