Published:Updated:

கந்துவட்டி கொடுமைப் போல துன்புறுத்துகிறார்கள்..! போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேதனை..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கந்துவட்டி கொடுமைப் போல துன்புறுத்துகிறார்கள்..! போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேதனை..
கந்துவட்டி கொடுமைப் போல துன்புறுத்துகிறார்கள்..! போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேதனை..

கந்துவட்டி கொடுமைப் போல துன்புறுத்துகிறார்கள்..! போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேதனை..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அதிகாரிகளால் கந்து வட்டி கொடுமை போல துன்புறுத்தப்படுகிறோம் என்று கரூர் மாவட்ட போக்குவரத்து மண்டலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கரூர் மாவட்ட அளவில் கரூர், மண்மங்கலம், கடவூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய 6 வட்டங்களுக்குட்பட்ட பொதுமக்கள் தங்களின் தேவைகளையும்,கோரிக்கைகளையும் முறையிட்டனர்.

அப்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத்தின் கரூர் கிளை சி.ஐ.டி.யூ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மனு காெடுக்க வந்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "கரூர் மண்டல போக்குவரத்துத் துறை தொழிலாளர்களை மிகவும் மோசமாக நடத்துவதோடு, பணி வாங்குவதில் அடிமைகள் போல நடத்துகிறார்கள். நாங்கள் சேவை நோக்கில் பணியாற்றும் நிலையில் எங்களை மிகவும் கொடுமை செய்கின்றனர். பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று வலுக்கட்டாயமாகத் தூங்காமல், ரெஸ்ட் கொடுக்காமல் மீண்டும் 300 கி.மீட்டர் முதல் 400 கி.மீட்டர் வரை ஓட்டச் சொல்கின்றனர்.

ஓட்டுநர்களுக்குக் குறிப்பிட்ட நேரம் ஓய்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் உயர்நீதிமன்றம் தீர்ப்பை மீறியும் எங்களை வதைக்கிறார்கள். ஒப்பந்தத்தில் 8 மணி நேரம்தான் பணி நேரம் என்று உள்ளது. ஆனால், அதனை மீறியும் கூடுதலாகப் பணியாற்றச் சாெல்லி அதிக வேலைப்பளு கொடுக்கின்றனர். ஒட்டுமொத்த திருச்சி மண்டலத்தோடு கரூர் பாேக்குவரத்து மண்டலம் இருந்தபாேது கூட இது போலக் கொடுமைகள் இல்லை. ஆனால், இப்பாேது எங்களைக் கந்து வட்டி கொடுமை போல ஓவர் டைம் காெடுத்து வாட்டி வதைக்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு முறை மனு அளித்துள்ளோம். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஓட்டுநர்களுக்கு ஓவர் டைம் பணி வழங்குவதால் விபத்து ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கன்றன. இருப்பினும் கரூரில் அதிக பணிச்சுமை அளிக்கின்றனர்' என்று தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு