Published:Updated:

தூத்துக்குடியில் இன்று 144 தடை உத்தரவு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தூத்துக்குடியில் இன்று 144 தடை உத்தரவு
தூத்துக்குடியில் இன்று 144 தடை உத்தரவு

தூத்துக்குடியில் இன்று 144 தடை உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 தூத்துக்குடி மாவட்டத்தில், ஜூலை 11-ம் தேதி (இன்று) ஒருநாள் 144 தடை உத்தரவு செயல்படுத்தப்பட உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரும் கட்டாலங்குளம் சீமையின் அரசராகவும் இருந்த மாவீரர் அழகுமுத்துகோன் அவர்களின், 307-வது பிறந்த தினம் இன்று  கொண்டாடப்பட இருக்கிறது. இதனால், தூத்துக்குடி பகுதியில் இன்று பெருமளவு கூட்டம் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மறைந்த தலைவர்களின் ஜெயந்தி மற்றும் நினைவு தினங்களில் சட்டம் ஒழுங்கு சிக்கல் வராமல் இருக்க, அந்தந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது.

அதைப் போலவே, விடிகாலை  5 மணி முதல் நாளை, அதாவது  12 -ம் தேதி காலை வரையிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, கட்டாலங்குளத்தில் நடக்கும் அழகுமுத்துகோன் அவர்களின், பிறந்த தின நிகழ்ச்சிக்கு வரும் மக்கள், பெரும் வாகனங்களில் வரக்கூடாது, பதாகைகள் மற்றும் ஆயுதங்கள் எதுவும் கொண்டுவரக்கூடாது எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, அந்தப் பகுதிக்குச் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு