Published:Updated:

துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கய்ய நாயுடு பின்னணி இதுதான்...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கய்ய நாயுடு பின்னணி இதுதான்...!
துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கய்ய நாயுடு பின்னணி இதுதான்...!

துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கய்ய நாயுடு பின்னணி இதுதான்...!

துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பி.ஜே.பி தலைமையிலான கூட்டணி சார்பில் மத்திய அமைச்சராக இருந்த எம். வெங்கய்ய நாயுடு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தென்மாநிலத்தைச் சேர்ந்த வெங்கய்ய நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ராஜாஜி மற்றும் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியும் துணை ஜனாதிபதி தேர்தலில் மோத இருப்பது உறுதியாகி உள்ளது. இருவரும் தங்களின் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட வெங்கய்ய நாயுடு மிகச்சிறந்த பேச்சாற்றல், நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். பி.ஜே.பி-யின் நாடாளுமன்றக் குழு, ஆட்சிமன்றக் குழு, அகில இந்தியத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பவரே நாடாளுமன்ற மாநிலங்களவையை நடத்தும் அதிகாரம் படைத்தவர் என்பதால், நீண்ட நாடாளுமன்ற அனுபவங்களைக் கொண்டுள்ள வெங்கய்ய நாயுடுவை அப்பதவிக்கு பி.ஜே.பி நிறுத்தியிருப்பதாகவே தெரிகிறது.

துணை ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள வெங்கய்ய நாயுடு, தனது அரசியல் வாழ்வில் கடந்துவந்த பாதை:-

* ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1949-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தவர்.

* B.A., B.L. படித்துள்ள இவர், கல்லூரி மாணவராக இருந்தபோதே பாரதிய ஜனதாவின் இளைஞர் அமைப்பான A.B.V.P.-ல் உறுப்பினராக இருந்தார்.

* இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர்.

* 1977-80-ல் ஆந்திர மாநில ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்தார்.  

* 1980-83-ம் ஆண்டுவரை அகில இந்திய பி.ஜே.பி. இளைஞர் பிரிவு துணைத்தலைவர் பொறுப்பை வகித்தார்.

* 1978-ம் ஆண்டு முதல்முறையாக ஆந்திர சட்டப்பேரவைக்கு உதயகிரி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1985-ம் ஆண்டுவரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

* 1980-85-ம் ஆண்டுகளில் ஆந்திர மாநில பி.ஜே.பி. சட்டமன்றக் கட்சித் தலைவராக இருந்தார்.

* 1980 முதல் 1985-ம் ஆண்டுவரை ஆந்திர மாநில பி.ஜே.பி தலைவராகவும், 1985 முதல் 1988-ம் ஆண்டுவரை ஆந்திர பி.ஜே.பி. பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார்.

* 1993-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை பி.ஜே.பி தேசிய பொதுச்செயலாளர் பதவியில் இருந்துள்ளார்.

* 1998 முதல் மூன்றுமுறை கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

* 2000 முதல் 2002-ம் ஆண்டுவரை வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

* 2002 முதல் 2004 வரை பி.ஜே.பி-யின் தேசிய தலைவர் பதவியை வகித்தார். 2004-ல் பி.ஜே.பி. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

* 2014-ம் ஆண்டு முதல் மத்திய நகர்ப்புற மேம்பாடு, ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராகவும், இந்தத்துறையுடன் சேர்த்து தகவல்-ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.

* 2016-ம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது, பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு