Published:Updated:

விதிமீறல்: மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு!

விதிமீறல்:  மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு!
விதிமீறல்: மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதுரை:  திருச்சி தஞ்சை, கரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 ஆண்டுகளுக்கு  மேல் செயல்படக்கூடிய மணல் குவாரிகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

மணல் குவாரிகள் விதிமீறி மணல் அள்ளுவதாகத் தொடரப்பட்ட பல்வேறு மனுக்களையும்  ஒட்டுமொத்தமாக விசாரித்த நீதிமன்றம், இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.

விதிமீறல்:  மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 5 வருடங்களுக்கு மேல் செயல்படக் கூடிய மணல்  குவாரிகளை மூடவும், 5 ஆண்டுகளுக்கு உள்பட்ட கால அளவில் செயல்படும் மணல்  குவாரிகள் இனி செயல்பட வேண்டுமானால், மாநில அளவிலான சுற்றுச் சூழல்  கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

##~~##
மேலும் இனி புதிதாகத் தொடங்கும் குவாரிகளும் இத்தகைய அனுமதி பெற்ற பிறகே  செயல்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
நீதிமன்றத்தின்  இந்த உத்தரவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.