Published:Updated:

நெல்லையில் பழங்கால பணத்தாள் கண்காட்சி! அருங்காட்சியகத்தில் குவியும் மாணவர்கள்!

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால பணத்தாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

நெல்லையில் பழங்கால பணத்தாள் கண்காட்சி! அருங்காட்சியகத்தில் குவியும் மாணவர்கள்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு பழங்கால கலாசாரத்தை வெளிப்படுத்தும் பொருள்கள், ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி, அதனுள் இருந்த பழங்கால உலோகப் பொருள்கள், கல்வெட்டுகள் என அரிய பொருள்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்திற்கு ஏராளமான மாணவ மாணவிகள் நாள்தோறும் சென்று தங்களின் பாரம்பர்ய சின்னங்களைப் பார்வையிட்டு வருகின்றனர். 

நெல்லையில் பழங்கால பணத்தாள் கண்காட்சி! அருங்காட்சியகத்தில் குவியும் மாணவர்கள்!

இந்த அருங்காட்சியகத்தில், மாணவர்கள் பயனடையும் வகையில் கண்காட்சிகள், கருத்தரங்கம் போன்றவை நடத்தப்படுகின்றன. அத்துடன், மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகளும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாணவர்கள் பயன்பெறும் வகையில், பணத்தாள்கள் மற்றும் பணப் பொருள்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சி இன்று தொடங்கியது. 

வரும் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் இந்தியாவில் பழக்கத்தில் இருந்த பணத்தாள்கள், வெளிநாட்டு பணத்தாள்கள், பழங்கால ஓவியங்கள், உலக நாடுகளின் தேசியக் கொடிகள், 25-க்கும் அதிகமான மொழிகளில் பழக்கத்தில் இருக்கும் எண் முறைகள், பழங்கால தமிழ் எழுத்துகள், அபூர்வமான புகைப்படங்கள் பழங்கால அணிகலன்கள், நகைப்பெட்டிகள், பண்டைய நாகரிகத்தை விளக்கும் புகைப்படங்கள், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட புகைவண்டி மற்றும் பேருந்துகளின் பயணச்சீட்டுகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு