Published:Updated:

இப்படியும் நடக்கிறது! அரசு போக்குவரத்துத்துறையை மிரளவைத்த அதிகாரிகள்!

ராகினி ஆத்ம வெண்டி மு.
இப்படியும் நடக்கிறது! அரசு போக்குவரத்துத்துறையை மிரளவைத்த அதிகாரிகள்!
இப்படியும் நடக்கிறது! அரசு போக்குவரத்துத்துறையை மிரளவைத்த அதிகாரிகள்!

சென்னை போக்குவரத்துக் கழகப் பணிமனை ஊழியர்கள் நான்கு பேர், போலி பஸ் பாஸ் விநியோகித்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Representative image

சென்னை மாநகரப் போக்குவரத்துப் பணிமனை ஊழியர்கள் நான்கு பேர், கடந்த இரண்டு வருட காலமாக போலி பஸ் பாஸ் விநியோகித்து வந்துள்ளனர். இவர்களுடன் ஆந்திராவின் நகரியைச் சேர்ந்த மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து, கடந்த இரண்டு  வருடங்களாக 200-க்கும் மேற்பட்ட போலி பஸ் பாஸ்களைத் தயாரித்து விநியோகித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆதம்பாக்கம் பணிமனையின் கிருஷ்ணகுமார், திருவான்மியூர் பணிமனையின் ஜகதீஷ், அண்ணா நகர் சுரேஷ், ஆவடி பிரகாஷ் ஆகியோருடன் ஆந்திராவின் ரமேஷ் பாபு ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இந்த ஐந்து பேரையும் 15 நாள்கள் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்று, போலி பஸ் பாஸ் தயாரித்து பணிமனையில் பணியில் இருக்கும்போதே முறைகேடுகளில் ஈடுபட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.