Published:Updated:

விரைவில் டாக்ஸி மற்றும் ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ்!

சோ.கார்த்திகேயன்
விரைவில் டாக்ஸி மற்றும் ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ்!
விரைவில் டாக்ஸி மற்றும் ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை முன்னிட்டு டாக்சி மற்றும் ஆட்டோக்களுக்கு விரைவில் ஜி.பி.எஸ் நிறுவ கட்டாயமாக்க உள்ளதாக மஹாராஷ்ட்ரா அரசு தெரிவித்துள்ளது. 

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராதாகிருஷ்ண விக்கே பாட்டீல், சட்டசபையில் பேசுகையில், `மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கருப்பு-மஞ்சள் டாக்ஸிகள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா ஆகியவற்றைக் கண்காணிக்க ஏதுவாக அவற்றில் தேவையான சாதனங்கள் பொறுத்த வேண்டும்' என்று வலியுறுத்தினார். இவர் மட்டுமின்றி காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் விஜய் வதேட்டிவர், அமித் தேஷ்முக் உள்பட மற்ற உறுப்பினர்களும் இது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசுக்கு வலியுறுத்தினர். 

இந்த நிலையில் சட்டசபையில் உள்துறை அமைச்சர் ரஞ்சித் பாட்டீல் கூறுகையில்,"ஓலா மற்றும் யூபர் போன்ற மொபைல் அப்ளிகேஷன் நிறுவனங்களைப் போல, ஆட்டோ மற்றும் கருப்பு-மஞ்சள் டாக்சிகளிலும் ஜி.பி.எஸ் கட்டாயம் நிறுவப்பட வேண்டும். விரைவில் டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கு ஜி.பி.எஸ் கருவியை நிறுவுவதை மஹாராஷ்ட்ரா அரசு  கட்டாயமாக்க உள்ளது" என்றார் அவர்.