Published:Updated:

உயிரைக் கொடுத்தாவது தமிழை மீட்போம்! வழக்கறிஞர்கள் போராட்டத்தின் 6-ம் நாள் இன்று

யர் நீதிமன்றத்தில் தமிழை வழக்குமொழியாக்கக் கோரி, வழக்கறிஞர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மெட்ராஸ் ஸ்டேட்டை தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி, உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கிய ஜூலை 27ம் தேதி, தங்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். பட்டினிப் போராட்டத்தின் ஆறாவது நாள் இன்று.

பல்வேறு கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தமிழின உணர்வாளர்களும் அவர்களைச் சந்தித்து தங்கள் ஆதரவுகளைத் தெரிவித்துவருகின்றனர். இதுவரை அரசு சார்பில் யாரும் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டக்காரர்களும் 2006ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் போடப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் கிடைக்காதவரை, தமிழை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஆகாதவரை, உயிரே போனாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர். 

அடுத்த கட்டுரைக்கு