Published:Updated:

கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் உள்பட 10 பேர் மீது வழக்கு!

கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் உள்பட 10 பேர் மீது வழக்கு!
கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் உள்பட 10 பேர் மீது வழக்கு!
கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் உள்பட 10 பேர் மீது வழக்கு!

மேலூர்: மதுரையில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் மத்திய அமைச்சர்  மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி  உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு பல  ஆயிரம் கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்படுத்தி இருப்பதாக கலெக்டராக இருந்த சகாயம்  அரசுக்கு அறிக்கை அளித்தார்.

இதன் அடிப்படையில் தற்போதைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா சிறப்பு குழுக்கள் அமைத்து  கடந்த 2-ம் தேதி முதல் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகிறார். இதில் பல தனியார்  கிரானைட் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிக்கு மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கிரானைட் கற்களை வெட்டியது தொடர்பாக அரசுக்கு தகவல்  தெரிவிக்காத கிராம நிர்வாக அதிகாரிகள் சுப்புராஜ், செல்வராஜ் ஆகியோர் பணியில்  இருந்து விடுவிக்கப்பட்டனர்.

##~~##
இந்நிலையில்,கீழவளவு கிராம நிர்வாக அதிகாரி பார்த்திபன் புகாரின் பேரில், அம்மன்  கோவில்பட்டி சர்க்கரைபீர் மலை அருகே அனுமதித்த இடத்தின் அருகே அரசுக்கு  சொந்தமான குவாரியில் கிரானைட் கற்கள் 1,823.571 கனமீட்டர் அளவு வெட்டி  எடுத்ததாக ஒலிம்பஸ் குவாரி நிறுவனத்தின் அதிபர் நாகராஜ், மற்றும் மு.க.அழகிரியின்  மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் உள்பட 10 பேர் மீது வழக்கு!

கிராம நிர்வாக அதிகாரிகள் கொடுத்துள்ள புகார்களின் அடிப்படையில், பி.ஆர்.பி.  நிறுவனம், ஓம்ஸ்ரீஓம் கிரானைட் நிறுவனம், தீபா இம்பெக்ஸ் லிமிடெட் கிரானைட்  நிறுவனம், சிந்து கிரானைட் நிறுவனம், பாரதியார்புரத்தை சேர்ந்த பழனிச்சாமி அம்பலம்  மகன் பெரியசாமி, மேலூர் பன்னீர் முகம்மது, மேலூர் இப்ராகிம் சேட், ராஜபாளையம்  ஏ.பி.முருகன் உள்பட மொத்தம் கிரானைட் குவாரி அதிபர்கள் 10 பேர் மீது போலீசார்  வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.