Published:Updated:

டெசோ மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு!

விகடன் விமர்சனக்குழு
டெசோ மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு!
டெசோ மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு!
டெசோ மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு!

சென்னை: சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டிற்கு தடை  விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாலசுப்ரமணியம் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ள மனுவில்,சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ  மாநாட்டினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், டெசோ மாநாட்டுக்கு தடை  விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் டெசோ மாநாடு நடத்துபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய  வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

டெசோ மாநாடு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 12 ஆம் தேதியன்று நடைபெற உள்ளதாக கருணாநிதி அறிவித்துள்ள நிலையில்,அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.