Published:Updated:

சுசி ஈமு கோழிப் பண்ணை மீது மோசடி வழக்குப்பதிவு!

விகடன் விமர்சனக்குழு
சுசி  ஈமு கோழிப்  பண்ணை மீது மோசடி வழக்குப்பதிவு!
சுசி ஈமு கோழிப் பண்ணை மீது மோசடி வழக்குப்பதிவு!

ஈரோடு: ஈரோட்டில் உள்ள சுசி  ஈமு கோழிப் பண்ணை மீது 250 கோடி ரூபாய் மோசடி  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுசி  ஈமு கோழிப்  பண்ணை மீது மோசடி வழக்குப்பதிவு!

ஈரோட்டில் உள்ள 'சுசி ஈமு பார்ம்’ என்ற ஈமு கோழிப் பண்ணையில் ஏராளமானோர்  முதலீடு செய்திருந்தனர். இந்நிறுவனம் மீது  சமீபகாலமாகவே புகார்கள் கூறப்பட்டு வந்த  நிலையில்,'சுசி ஈமு பார்ம்’ ரூ.250 கோடி வரை முதலீடுகளைப் பெற்று மோசடி  செய்துவிட்டதாக அதன் நிர்வாக இயக்குனர் மீது 200 க்கும் மேற்பட்டோர் கடந்த இரு  நாட்களாக காவல்துறையில் புகார் அளித்தனர்.

##~~##
இந்தப் புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில்,இன்றும் 200  க்கும் அதிகமானோர் கூடி அதன் நிர்வாக இயக்குநர் பேரில் புகார் அளித்து, தங்கள்  முதலீடுகள் குறித்து கேட்டனர்.
இதனையடுத்து இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை  மற்றும் வருவாய் அதிகாரி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு, முதலீட்டாளர்கள்  சமாதானப்படுத்தப்பட்டனர்.இந்நிலையில் இன்று அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.

தீவ்னம் இன்றி தவிப்பு

இதனிடையே இந்த பண்ணையில் கடந்த 3 நாட்களாக கோழித் தீவனம் இன்றி திண்டாடுவதால், ஈமு கோழிகள் தீவனம் இன்றி வாடிப்போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இப் பண்ணையில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்து, பண்ணையை முற்றுகையிட்டு வருவதால் பண்ணையின் செயல்பாடு தடைப்பட்டுள்ளது.

அதிகாரிகள் அந்தக் கோழி நிறுவனத்தின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டபோது, அங்கிருந்த 75 ஆயிரம் ஈமு கோழிகளுக்குத் தேவையான தீவனம் நிறுவனத்தில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

கடந்த 3 நாள்களாக கோழிகள் தீவனமின்றி இருந்ததும் தெரியவந்தது.அதிகாரிகளும் அவற்றின் தீவனத்துக்கு வழி தெரியாமல் திண்டாடுகின்றனர்.கோழிகளையும் அழிக்க முடியாது என்பதால் சரியான தீர்வு குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

நடிகர்கள் மீது வழக்கு

இதனிடையே சுசி ஈமு கோழிப் பண்ணை விளம்பரத்தில் நடித்த இரண்டு திரைப்பட நடிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.