Published:Updated:

’பொல்லானுக்கும் மரியாதை செலுத்துங்கள்!’ - தீரன் சின்னமலை நினைவு தின சர்ச்சை

துரை.வேம்பையன்
’பொல்லானுக்கும் மரியாதை செலுத்துங்கள்!’ - தீரன் சின்னமலை நினைவு தின சர்ச்சை
’பொல்லானுக்கும் மரியாதை செலுத்துங்கள்!’ - தீரன் சின்னமலை நினைவு தின சர்ச்சை

"மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தின விழாவின்போது, அவரது படைத்தளபதி பொல்லானுக்கும் மரியாதை செலுத்த வேண்டும்" என்று கரூர் மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் மனுகொடுக்கப்பட்டுள்ளது. பொல்லான் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் வடிவேல் என்பவர்தான், தலித் அமைப்பு நிர்வாகிகளோடு போய் கோரிக்கை மனு அளித்திருக்கிறார்.

 ”தீரன் சின்னமலை மூன்று போர்களில் வெள்ளையர்களை வென்ற வரலாற்றிற்கு அவரது படைத்தளபதி பொல்லான்தான் முக்கியக் காரணம். பொல்லான் வெள்ளையர்களிடம் மாறு வேடத்தில் வேலைக்காரன் போல் பணிபுரிந்து, அவர்களின் போர் பற்றிய ரகசியத் தகவல்களை செருப்புகள் மூலம் தீரன் சின்னமலைக்கு அனுப்பியதால்தான், அவரால் மூன்று போர்களில் ஜெயிக்க முடிந்தால்,பொல்லானுக்கு அவரது சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கனும்" என்று ஏற்கெனவே இந்த அமைப்பினர் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். அதை வலியுறுத்தி ஈரோட்டில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்நிலையில்தான், அடுத்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

அவர்கள் ஈரோடு கலெக்டர் பிரபாகரிடம் அளித்த மனுவில், "சுதந்திரப் போராட்டத்தில் தீரன் சின்னமலையுடன் இணைந்து அவரது படைத்தளபதியாகப் போராடியவர் பொல்லான். ஆங்கிலேய படைகளுடன் போரிட்டபோது, அவர் கொல்லப்பட்டார். அவர் இறந்த பின்னர்தான் சங்ககிரி கோட்டையில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார். தீரன் சின்னமலை வரலாற்று ஆவணங்கள் அனைத்திலும் இதுகுறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பொல்லானுக்கு உரிய மரியாதையை இதுவரை யாரும் செலுத்தவில்லை. அவர் வாழ்ந்த கொல்லான்வலசு பகுதியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். அறச்சலூரில் நாளை நடக்க இருக்கும் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழாவில் பொல்லான் உருவப் படத்திற்கும் உரிய மரியாதையைச் செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.