Published:Updated:

வழக்கறிஞர்களை வேலை செய்யவிடுங்கள்; இப்படியும் ஒரு வேண்டுகோள் !

வழக்கறிஞர்களை வேலை செய்யவிடுங்கள்; இப்படியும் ஒரு வேண்டுகோள் !
வழக்கறிஞர்களை வேலை செய்யவிடுங்கள்; இப்படியும் ஒரு வேண்டுகோள் !

இந்தியன் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ச்சியாக, இந்தியத் தொழிலாளர்கள் பிரச்னைகளைக் கையில் எடுத்து தீர்வு கண்டுவருகிறது . இந்தச் சங்கத்துக்கு, மும்பை முன்னாள் நீதிபதியான ஹாஸ்பாட்  தலைவராக உள்ளார். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுவைச் சார்ந்த சில முக்கிய உறுப்பினர்கள், மதுரையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், 'தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு எதிரான அநீதி அரங்கேறிக்கொண்டே வருகிறது.

மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவான வழக்கில் ஆஜரானதாக, வழக்கறிஞர் முருகனைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள். அவர் என்ன தவறு செய்தார். வழக்கறிஞர் பணியைத் தானே செய்தார். ஏன் அவர் பணியைத் தடுக்கும்படிச் செய்கிறீர்கள்? என்றாவது யாரவது போலீஸ் அவர்களது பணியைச் செய்யக்கூடாது என்று தடுத்துள்ளதா? அதைப்போலத்தான் முருகன் தன் வேலையைச் செய்து வழக்கில் ஆஜர் ஆகியுள்ளார். இதில் தவறில்லை. இது வழக்கறிஞர்களின் கடமை, உரிமை. இதைப் பறிக்கலாமா ? முருகன் மீது எந்தத் தவறும் இல்லை. எனவே அவரை விடுவித்து, அவர்மீதுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். மேலும், தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரிய வழக்கறிஞர், ஹெல்மெட் பிரச்னையில் போராடிய வழக்கறிஞர் உள்ளிட்ட சுமார் 126 நபர்களைப் பணி இடை நீக்கம் செய்ததைத் திரும்பப்பெற வேண்டும். இல்லை என்றால், இது போன்ற விசயங்கள் தொடர் கதையாக மாறிவிடும்' என்றனர் .