Published:Updated:

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிக வாபஸ்

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிக வாபஸ்
வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிக வாபஸ்

தமிழை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கவேண்டி மதுரையில் நடந்துவந்த பட்டினிப்போராட்டம் நேற்று தற்காலிகமாக முடித்துக்கொள்ளப்பட்டது. 


அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளதுபோல மாநிலமொழியை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டுமென்று தமிழகத்தில் நீண்டகாலமாகப் போராடிவருகிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க ஆட்சியிலும் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் மத்திய அரசு இதற்கு ஒப்புதல் வழங்காமல் உள்ளது.

இந்த நிலையில்தான், வழக்கறிஞர் பகவத்சிங் தலைமையில் வழக்கறிஞர்கள் உட்பட தமிழ் உணர்வாளர்கள் ஒன்பது பேர் கடந்த 27-ம் தேதி காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தை மதுரையில் தொடங்கினார்கள். மூத்த தோழர் நல்லக்கண்ணு உட்பட, பல தலைவர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துச் சென்றனர். இந்த நிலையில், ஒன்பதாவது நாளான இன்று தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழுவினர் நேரில் வந்து கேட்டுக்கொண்டதன் பேரில், இன்று மாலை பட்டினிப்போராட்டம் நிறுத்தப்பட்டது. இன்னும் சில நாள்களில், அனைத்து வழக்கறிஞர்களும் ஒன்று சேர்ந்து இந்தக் கோரிக்கைக்காக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.