Published:Updated:

'பாதுகாப்பு வசதி ஏதுமில்லை'- கலெக்டர் அறிக்கையால் மதுரை விஷால் மால் மூடப்படுமா?

செ.சல்மான் பாரிஸ்
'பாதுகாப்பு வசதி ஏதுமில்லை'- கலெக்டர் அறிக்கையால் மதுரை விஷால் மால் மூடப்படுமா?
'பாதுகாப்பு வசதி ஏதுமில்லை'- கலெக்டர் அறிக்கையால் மதுரை விஷால் மால் மூடப்படுமா?

மதுரையில், 'மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் நடந்துவந்த மதுக்கூடங்கள் பலவற்றை மூட, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சமீபத்தில் உத்தரவிட்ட நிலையில், பொதுமக்களால் அதிகப் புகார்களுக்குள்ளான  சர்ச்சைக்குரிய விஷால் மாலில், அரசு அனுமதியுடன் மதுக்கூடம் செயல்பட்டுவருவதைத் தடைசெய்ய வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. 

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், விஷால் டி மாலில் இயங்கும் மதுக்கூடத்தை ஆய்வுசெய்யுமாறு மதுரை கலெக்டருக்கு உத்தரவிட்டது. நேற்று ஆய்வு நடத்திய கலெக்டர் வீரராகவராவ், அங்கு அளவுக்கு அதிகமாக மது விற்பனைசெய்யப்படுவதாகவும், அந்த மாலில் பார்க்கிங் வசதி, பாதுகாப்பு வசதி ஏதுமில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல்செய்துள்ளார். விஷால் டி மாலில் தொடர்ந்து மதுக்கூடம் செயல்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த மதுக்கூடத்தில், பெண்களுக்கு சலுகை உண்டு என்று முன்பு செய்யப்பட்ட விளம்பரத்தால், பல போராட்டங்கள் நடந்தன.

இதேபோலத்தான், அன்சுல்மிஸ்ரா கலெக்டராக இருந்தபோது, இந்த மாலில் செயல்படும் ஐந்து  திரையரங்குகளைப் பாதுகாப்பில்லாத காரணத்தால் திறக்கக்கூடாது என்று தடை போட்டார். ஆனால், அன்சுல்மிஸ்ரா மாறிச்சென்றதும் அரசியல் செல்வாக்குள்ள இந்த மாலின் உரிமையாளர்கள் திரையரங்கை  நடத்திவருகிறார்கள்.