Published:Updated:

'நான் முருகன் அவதாரம்'- கலகலகத்த கடலூர் ஆட்சியர் அலுவலகம்

க.பூபாலன்
'நான் முருகன் அவதாரம்'- கலகலகத்த கடலூர் ஆட்சியர் அலுவலகம்
'நான் முருகன் அவதாரம்'- கலகலகத்த கடலூர் ஆட்சியர் அலுவலகம்

டலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையில் வேல் மற்றும் லிங்கத்துடன் ஒருவர் விநோத நடனம் ஆடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு நீதிநாள் நடைபெற்றது. அப்போது, விருத்தாசலத்தை அடுத்த மேலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பழனிமுருகன் என்பர் திடீரென்று, கைப்பையில் வைத்திருந்த வேல் மற்றும் லிங்கத்தை எடுத்துக்கொண்டு விநோதமாக நடனமாடினார். இதைக் கண்டதும் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் அவரைச் சுற்றி நின்று கைதட்டிச் சிரித்தபடி வேடிக்கை பார்த்தனர்.


    

அப்போது அங்கு வந்த அரசு ஊழியர் ஒருவர், ' யார் நீ? உனக்கு என்ன வேண்டும்? எதற்கு இங்கு வந்து ஆடுகிறாய்?' எனக் கேட்டார். அதற்கு  அவர், ' நான் முருகனின் அவதாரம். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் மரங்களையெல்லாம் அழித்துவிட்டு பாலைவனத்தில் போடக்கூடிய சோலார் பேனல்களை ஊருக்குள் அமைத்திருக்கிறது. இதனால் இயற்கை வளங்கள் அடியோடு அழிந்துவிட்டன. ஆடு, மாடுகள் மேய இடமில்லாமல் தவித்து வருகின்றன. அதனை தடுக்கத்தான் நான் முருகன் அவதாரம் எடுத்து வந்துள்ளேன்' எனக் கூறி தொடர்ந்து நடனமாடினார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த போலீஸார் அவரைக் கூட்டிக் கொண்டு வெளியில் சென்றனர்.